பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிமைப் பயிற்சி முகாம்கள் 31 of ராக அழைத்திருந்தார். திரு பிள்ளையவர்களின் பங்கு எங்களுக்கெல்லாம் உற்சாகத்தை அளித்தது.முதுமைநிலை யிலும் இளைஞர்போல் செயலாற்றியது எங்கட்குப் பெரு வியப்பைத் தந்தது. ஒரு நாள் சா. கணேசனையும் விருந் தினராக அழைத்திருந்தோம். அவரும் மனமுவந்து வந்து எங்களுடன் இருந்தார்.பிள்ளையார்பட்டிக்குநேர்வடக்கில் இ கல் தொலைவிலுள்ள வயிரவன்பட்டிக் கோயிலுக்கும் எங்களை இட்டுச் சென்று காட்டினார். மாணவர் கூட்டத் திலும் ஒரு மணி நேரம் பேசி அவர்கட்கு ஊக்கம் ஊட்டி னார். ஒரு நாள் (சனிக்கிழமை) காரைக்குடி சென்று மறு நாள் காலை வீட்டை விட்டு எங்கும் நகராத என் மனைவி, முதல் மகன் இராமலிங்கம் (வயது-7) இராமகிருஷ்ணன் (வயது-3) இவர்களைக் கூட்டி வந்தேன். கோயிலைச் சுற்றிக் காட்டினேன். மாலையில் தனியாகப் பேருந்தில் அனுப்பி வைத்தேன். ஒரு நாள் இரவு மாணவர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து விட்டுப் படுக்கைக்குப் போனோம். என் அருகில்தான் திரு. T. W. நீலகண்டன் படுக்கையை விரித்திருந்தார். நான் படுத்ததும் 2 நிமிடத்தில் தூங்கிவிட்டேன். மறுநாள் திரு. நீலகண்டன், என்ன ரெட்டியார், மின்னல் வேகத் தில் தூங்கி விட்டீர்கள். எனக்குத் தூக்கம் வருவதற்கு அரைமணி நேரத்திற்கு மேலாகின்றது' என்றார். நான் 'மனத்தில் தீய எண்ணங்கள் இல்லை. குடும்பக் கவலை யும் இல்லை. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றாற்போல மனநிறைவு உடையவன். அதனால் உடனே தூங்கி விடுகின்றேன்' என்றேன். 'ஆம்: உண்மை, உண்மை’ என்று ஆமோதித்தார் அந்தப் பெரியவர். - - - குடிமைப்பயிற்சி என்றால் என்ன? விடுதலை பெற்ற நாட்டில் வாழும் குடிமகன் ஒழுங்காக இருத்தல், செய்வன திருந்தச் செய்தல், எத்தொழிலைச் செய்யும் பொறுப்பு: வகித்தாலும் கடமைகளைத் தவறாது செய்தல்,