பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# G நினைவுக் குமிழிகள்-3 (இப்போது நாணத்தால் முகம் கவிழ்ந்தது. அவர் தம் உயர்வு நவிற்சியை என்னால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை.) திரு. K. R. சீநிவாச அய்யர் பள்ளிக்கருகிலேயே குடியிருந்தார். வெகுளி; மிக நல்லவர். எங்களோடு நன்கு பழகுவார். செல்வச் செழிப்புள்ளவர். ஆசிரியர்களைப் பொதுவாகத் தன் வசப்படுத்திக் கொள்ளும் வறுமையால் இவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. தன்னிறைவு மிக்கவராகக் காணப்பட்டார். இவருடைய பள்ளிக்கு எங்கள் கல்லூரி மாணவர்கள் கற்பிக்கும் பயிற்சிக்கும். நடைமுறையில் பள்ளி எப்படி இயங்குகின்றது என்று பார்க்கவும் வேண்டிய சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கு மாதலால் இவரைப்பற்றியும் இவருடைய பள்ளி இதர ஆசிரியர்களைப் பற்றியும் பள்ளியின் சூழ்நிலைபற்றியும் நடப்புகளைப்பற்றியும் அறிந்துகொள்ள வாய்ப்புகள் பின்னர் ஏற்படுமாதலால் இவரைப்பற்றி இத்துடன் நிறுத்திக் கொள்ளுகின்றேன். என்னுடைய பு த் த க அளவைக் கொண்டே என்னைப் பேரறிஞர் என்று நினைத்துக் கொண்டுவிட்டார். இவர் நினைப்பை மெய்ப்பிப்பதற்கு இன்னும் எவ்வளவோ கற்க வேண்டும். கல்வி கரை இல’ என்பது நாலடியார் வாக்கு: அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ என்பது பொய்யாமொழி, இவை தான் எனக்கு இன்றுவரை இரு கண்களாக வழி காட்டி வருகின்றன. ஒன்பது மாதம் நிறைவு பெற்றிருந்த என் மகன் இராமலிங்கத்தைப் பார்க்க முடியாமல் இருக்க முடிய வில்லை. குடும்பத்தைக் கொண்டு வருவதற்கு முன் இரு முறை வார விடுமுறை நாட்களில்போய் வந்ததாக நினைவு. வெள்ளி மாலையே இரவு பத்து மணிக்குள் துறையூர் வந்து சேர்ந்துவிடுவேன். ஒரு சனியன்று விடைபெறுதல்’ நிகழ்ச்சிக்குத் துறையூர்ப் பள்ளி ஆசிரியப் பெருமக்கள் அவசரமாக ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளியிலிருந்து விடுதலை பெற்ற சூழ்நிலை சரியாக இல்லாததால் இதில்