பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

వీటి? நினைவுக் குமிழிகள்.: பேராசிரியர் பதவிக்கு எங்கள் கல்லூரியில் மூவர் பெயர்கள் அடிபட்டன. அதில் அடியேன் ஒருவர் துணையும் இல்லாத நிலையில் விண்ணப்பம் வைத்து நேரில் முயன்றேன். எனக்காக நிர்வாகத்திற்குப் பரிந் துரைப்பதற்கு யாரும் இல்லாததால் நானே எல்லா நிலைகளிலும் உரியவர்களைப் பார்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டேன். 'திக்கற்றவருக்குத் தெய்வமே துணை: என்ற வாக்கின்படி அவன் உதவுவான் என்ற நம்பிக்கை யில் முயன்று வந்தேன். இது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. - என் நண்பர், வகுப்புத் தோழர், திரு K. நாராயண அய்யங்கார் நெல்லை மாவட்ட நீதிபதி எஸ். அரங்கராசன் மூலம் இரகசியமாக முயன்று வருகின்றார் என்பது எனக்குத் தெரிய வந்தது. இருவரும் உறவினர்கள். திரு. அரங்கராசன் என் வக்கீலாக இருந்தவர்; என்னுடன் நெருங்கிப் பழகியவர். திரு. அரங்கராசன் அரியக் குடியைச் சார்ந்த திரு அரிகிருட்டிணன் செட்டியாரிடம் சொல்லித் தாளாளருக்குப் பரிந்துன்ரக்குமாறு ஏற்பாடு செய்தார். திரு C, V, CT. W. வேங்கடாசலம் செட்டியாரும் திரு அரிகிருட்டிணன் செட்டியாரும் 'உற்வினர்கள்; நெருங்கிய நண்பர்களும்கூட இந்தச் செய்தியையும் நான் அறிந்து கொண்டேன்; நான் முயலாமல் இச் செய்தி எனக்கு எட்டியது. இதுதவிர, அழகப்பா கல்லூரி முதல்வர் திரு அலெக்ஸாண்டர் ஞானமுத்து எங்கள் கல்லூரியில் என்னுடன் பணியாற்றிய திரு. அய்யாதுரை ஜேசுதாசனை உயர்த்தத் திருவுள்ளங் கொண்டு செயற்பட்டார் என்பதைப் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றால் அறிந்து கொண்டேன். திரு ஜேசுதாசன் இப்பதவிக்கு முயன்றாரா? அல்லது ஞான முத்துவே இவர் முயலாமலே செயற்பட்டாரா என்பது எனக்குத் தெரியாது. இன்றைய உலகில் பல மட்டங்களில் யும் சமயமும் திறமையுடையவர்கட்குத் தடைக் கற்களாக இருந்து அவர்களது முன்னேற்றத்தைக்