பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பதவி உயர்வில் ஏற்பட்ட தடைகள் 3.39


حمامحسیستم جعبیده

முக் கரணங்களாலும் பிறருக்குத் தீங்கு செய்யாத அடியேனுக்கு எப்படிப் பகைவர்கள் உண்டான்ாரோ அறியேன், இஃது என் ஊழால் வந்ததோ?’ என்று வருத்தத்துடன் கூறினேன். 'மூவரில் உங்கள் தோழ ஆசிரியர்களில் ஒருவர்; மற்றவர் மாதிரிப்பள்ளித் தலைமை யாசிரியர்; மூன்றாமவர் மணியன். இந்த மூவருந்தான் அவதூறு செய்தியின் தந்தையர்கள். உங்கள் தோழ ஆசிரியர்மூலம் இச்செய்தி மாதிரி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்-அவர் மனைவி-மணியன் மனைவிமணியன் என்றவர்கள்மூலம் கடத்தப்பெற்று என் காதிற்கு எட்டச் செய்து, நடவடிக்கை எடுக்குமாறு மணியன் தொந்தரவு செய்கின்றான்.’’ என்றார்; மேலும், அப்பா மணியன், இஃது ரெட்டியார்மீது சுமத்தப்படும் அபாண்டப் பழி:இஃது இறைவனுக்கே அடுக்காது' என்று கூறியதாகக் கூறினார். எங்கள் செட்டியார்கள் மூலம் வேறொருவருக்குப் பேராசிரியர் பதவிதருமாறு பரிந்துரை வருகின்றது.அலெக்ஸாண்டர்ஞானமுத்துஒருகிறித்தவரை மனத்தில் வைத்துக்கொண்டு ஏதேதோ செய்கின்றார். நீங் கள் ஒருவர்தான் உங்கள் காலில் நின்று, உங்கள் பல்வேறு நற்பணிகளைக் கூறி என்னை நேரில் அணுகுகின்றீர்கள். இறைவனும் எனக்கு மனிதர்களை அளவிடும் திறமையை அளித்திருக்கின்றான். உங்கள் முதல்வரோ முதுகெலும்பே இல்லாத புழு. அஞ்சாமல் உங்கள் கடமையைச் செய்து வாருங்கள். தக்க சமயத்தில் பதவி உயர்வு உங்கட்கு வரும்’ என்று கூறி உற்சாக மூட்டினார்; 'போய் வாருங்கள்; இவற்றைத் தெளிவு படுத்தவே ராய. சொ. மூலமும் பிறர் வாயிலாகவும் சொல்லியனுப்பினேன். ' என்று கூறி வழி யனுப்பினார். ஒன்றுக்கும் பற்றாத அடியேனின்மீது: பாயும் இறைவனின் கருணை வெள்ளத்தை நினைத்த வண்ணம் கல்லூரிக்குப் பகல் பதினொரு மணிக்கு வந்து சேர்ந்தேன். முதலியார் வீட்டு விருந்தில் தான் இந்தத் தக்கி சமயம்" வந்தது போலும் என்று எண்ணி எண்ணி இறும்பூது அடைகின்றேன்.