பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- குமிழி-148 41. அறிவியலைத் தமிழில் பயிற்றல்-கருத்தரங்கம் 1 958-ஏப்ரல் திங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து P.U.C.வகுப்பிற்குத் தமிழில் அறிவியல் பாடங்களைப் பயிற்றுவிப்பது பற்றியஆறுவாரக் கருத்தரங். கினை முன்னின்று நடத்தும்படி ஒர் அழைப்பு வந்தது. என்னுடைய அறிவியல் நூல்களைக் கண்ட துணைவேந்தர் T. M. நாராயணசாமி பிள்ளை எனக்கு இந்தப் பொறுப் பினை நல்கினார் போலும்.இதற்கு ஊதியமாகவோ சன் மானமாகவோ ஒன்றும் இல்லை. ஆறு வாரம் பல்கலைக் கழக விருந்தினன் என்ற கெளரவம் ஒன்று தான். பணியே பரமன் வழிபாடு’ என்ற கொள்கையையுடைய அடியேன் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டேன். அக்காலத்தில் சோமலெ பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்ததால் எனக்கு என் பழக்க வழக்கத்தை யொட்டி எல்லா வசதிகளையும் செய்து தந்தார். அதிகாலை 6 மணிக்கு ஒவல்டின் கலந்த பால் பருகுவது பழக்கம்; பாலுக்கு ஏற்பாடு செய்து ஒவல்டின் டப்பா வையே வாங்கித் தந்து விட்டார். 8 மணியளவில் சிற்றுண்டி பால்; மதியம் உணவு; மாலை 4மணிக்கு காஃபி மட்டும்; இரவு 7-39 மணிக்கு சிற்றுண்டி பால்-இவை என் பழக்கங்கள். இவற்றையெல்லாம் சின்னசாமி என்ற பணியாள் கவனித்துக் கொள்ளுமாறு சோமலெயின் கட்டளை. அறிவியல் துறைகளில் துறைக்கு இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பெற்று நாடோறும்