பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 367 ஆசைகள், தனித் திறன்கள் இவற்றை மதிப்பிடும் சந்தர்ப் பங்கள் கிடைத்தன. - வைத்திநாதய்யர் (வயது -51) என்ற ஒருவர் மான வராக வந்து சேர்ந்தார். இவர் சட்டக் கல்வி கற்று பட்டம் பெற்றவர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் இரவில் உண்பதில்லை. அப்படி உண்டால் உணவு செரிமானம் ஆவதில்லை. மாணவர்கள் கூட்டம் போட்டு அவர்கள் அனுமதியின் பேரில் 40 விழுக் காடு கட்டணத்தில் சலுகை தந்ததாக நினைவு. இரண்டு காவல் துறை உதவி ஆய்வாளர்கள் கூடத் தம் பதவியைத் துறந்து ஆசிரியப்பயிற்சியில் வந்துசேர்ந்திருந்தனர்.ஒருவர் ஒன்றிரண்டு ஆண்டுகள் அநுபவத்துடன் பதவியை விட்டு விலகினவர். ஏன்? என்று கேட்டதற்கு தமக்கு மேல் உள்ள அதிகாரிகள் முகாம்வரும்போதெல்லாம்பெருஞ்செலவு ஏற் பட்டதென்றும், அப்படிச்செய்தால் பணி ஊதியம் போதா தென்றும், இதனால் தாம் கையூட்டு முதலியவற்றில் ஈடுபட நேரும் என்றும், தாம் அதை விரும்பவில்லை என்றும் கூறினார். நடராசன் என்பது இவர் திருநாமம். பயிற்சிக் காலத்தில் சிறந்த ஆசிரியராகத் திகழும் கூறுகள் இவரிடம் காணப்பட்டன. பயிற்சி முடிந்த பிறகு இராமநாதபுரம் அரசர் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து விட்டார். அப்போது அப்பள்ளியில் புகழ் பெற்ற தலைமையாசிரியராக இருந்தவர் இராஜா அய்யர்; இவர் ஒர் ஆறாண்டுகள் ஆசிரியர் தொகுதியிலிருந்து சட்டமன்ற மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார். இன்னொரு மாணவர் இராசு என்ற பெயரினர். பத்தாண்டுகட்கு மேல் காவல்துறையில் உதவிஆய்வாளராகப் பணியாற்றிப் பதவி யிலிருந்து விலகியவர்: பதவி நீக்கம் செய்யப்பெற்றதாக மாணவர்கள் கிசுகிசுத்தனர். இவரிடமும் சிறந்த ஆசிரிய ராகத் திகழும் கூறுகள் காணப் பெற்றன. - இன்னொரு மாணவர் இராஜகோபாலய்யர் என்ற பெயரினர்; பல்லாண்டுகள் துணிக்கடையில் பணியாற்றி