பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- குமிழி-152 45. என் நெல்லை நிகழ்ச்சிகள் 1959-மார்ச்சு மாதம் என்பதாக நினைவு, நெல்லையில் பல பதிப்பகங்கள் ஒன்று சேர்ந்து ஒர் அமைப்பினை ஏற்படுத்தி அவரவர்களின் நூல்களை மூன்று நாள் விழா எடுத்து காலையிலும் மாலையிலுமாக நூல் வெளியீடுகளைச் சிறப்பாக வெளியிட்டு வந்தனர். எஸ். ஆர். சுப்பிரமணியபிள்ளை வாழ்வில் விஞ்ஞானம்’ என்ற தலைப்பில் நூலொன்றை வெளியிட்டார். அதில் இரண்டு பகுதிகள்: ஒரு பகுதி உயிரியலைப் பற்றியது: அதை ஒருவர் எழுதினார்; மற்றொரு பகுதி இயற்பியலில் (Physics) அணுவாற்றலின் பயன் பற்றியது. இதை நான் எழுதினேன். ஒவ்வொரு நூலையும்பற்றி அதை எழுதிய ஆசிரியர்களே அறிமுகம் செய்து வெளியிட வேண்டும் என்பது ஏற்பாடு. அவரவர்கட்கு உண்டி உறையுள் அளிப்பது பொது அமைப்பின் செலவு. ஆசிரியர்கட்குப் பயணப் படியாக அந்தந்த நூலை வெளியிட்டவர் தர வேண்டியது என்பது திட்டம். ஒருநாள் மாலை பிற்பகல் வாழ்வில் விஞ்ஞானம்' என்ற நூலை அறிமுகம் செய்த பேச்சைத் தொடங்கும்போது, அறிவிலே தெளிவு. நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பினோர் வெள்ளம், பொறிகளின் மீது தனியர சாணை, பொழுதெல்லாம் நினதுபே ரருளின் நெறியிலே நாட்டம், கருமயோ கத்தில் நிலைத்திடல் என்றிவை அருளாய் குறிகுண் மேதும் இல்லதாய் அனைத்தாய்க் ல், குலவிடு தனிப்புரம் பொருளே. 4ઃ હૈ