பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.84 நினைவுக் குமிழிகள்.இ என்ற பாடலைக் கொண்டு இறைவனை வழிபட்டு என் பேச்சைத் தொடங்கினேன். அன்று என்னை அறியாத நிலையில் நானே இந்தப் பாட்டில் என்னை மறந்தேன். பிறகு அணுவைப் பற்றி ஒரு சிறு விளக்கம் தந்து அது மருத்துவத்தில், பயிர்த் தொழிலில், தொழில் துறையில் அஃது ஐசடோப் வடிவில் பயன்படும் முறையில் விளக்கி எதிர் காலத்தில் அது நிறைவேற்றப் போகும் அற்புதத்தை யும் சுருக்கமாக எடுத்துக் காட்டினேன். இந்தப் பேச்சு. மாதிரி இது வரையிலும் நான் பேசினதில்லை என்பதை நினைவு கூர்கின்றேன். இதற்கு ர ( வ ச | இ ப், கு. அருணாசலக் கவுண்டர் அவர்கள் வந்திருந்தார்கள்; முன் வரிசையிலோ மேடையிலோ வீற்றிருந்தார்கள். கடவுள் வணக்கப் பாடல் முடிந்ததும் சபாஷ் என்ற ஒலியை எழுப்பினார்கள். எல்லாப் பேச்சுகளையும்விட இஃது இலக்கிய மணம் கமழும் அறிவியல் பேச்சாக இருந்ததால் எல்லோருடைய கவனமும் இதில் ஈர்க்கப் பெற்றது. ஏதோ ஒர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை யாசிரியராகப் பணியாற்றியிருக்கும் திரு T.V. ஆறுமுகம் பிள்ளை கூட்டத்திற்கு வந்திருந்தார்; பேச்சைக் கேட்டு நல்வாழ்த்தைக் கூறினார்: மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்த திரு அ. க. நவநீதக் கிருட்டிணன் பிள்ளை இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார். இவர் என்னை முன்பின் அறியாதவர். இவரும் கூட்டத். திறுதியில் என்னை வந்து சந்தித்து வாழ்த்தும் மகிழ்ச்சியும் தெரிவித்தார். ராவ் சாகிப் கை குலுக்கி வாழ்த்து கூறினார்கள். முன்னமேயே f : Go) ஆண்டுகளாகக் காரைக்குடி வரும்போதெல்லாம் நெஞ்சு நெகிழ அன்பாகப் பழகியவர்கள். திரு S. R. சுப்பிரமணியப்பிள்ளைப் பதிப்பகத்தின் அதிபர் திருS-R.S. கூத்தநயினார். அவர் யணப் படியை ஒரு காகித உறையில் போட்டுத் தந்து ழ்ச்சி கூறி விடை பெற்றுச் சென்றார். நானும் இரவு