பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 - நினைவுக் குமிழிகள்-3 அ. சீநிவாசராகவன் (அப்போது தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் முதல்வர்) தலைமை வகிக்கின்றார். தொண்டைமான் அவர்கட்கும் Grrrr தருவதாக ஒப்புக் கொண்டுள்ளேன். திரு. தொண்டைமானையும் பேராசிரியர் கவுண்டர் அய்யாவையும் சீரீவைகுண்டத்தில் இறக்கி விட்டு நீங்கள் திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவனைத் தரிசனம் செய்து கொண்டு திரும்பும்போது தொண்டைமானையும் கவுண்டர் அய்யா அவர்களையும் கூட்டிக் கொண்டு வந்துவிடலாம்' என்று கூறி காலை சரியாக 8-30 மணிக்குக் கார் வரும்; தயாராக இருங்கள்' என்று கூறிச் சென்றார். சிரீவைகுண்டம் உயர்நிலைப் பள்ளித் தலைமை யாசிரியராக இருந்தவர் என் அரிய நண்பர் (எல்.டி. வகுப்பில் என் வகுப்புத் தோழர்) ஆதிநாதன். அப்பள்ளி யின் தலைமையாசிரியராக இருப்பவரைப் பார்க்க இஃது ஒரு சந்தர்ப்பமாயிற்று என்பதை நினைத்துக்கொண்டேன். சரியாகக் காலை எட்டரை மணிக்கு திரு.தொண்டைமான் திரு. கவுண்டர் அய்யா இவர்களை ஏற்றிக்கொண்டு நான் இருக்கும் விடுதிக்குக் கார் வந்தது. நானும் காரிலேயே கவிதையதுபவக் கைப்படியில் சில முக்கியமான பகுதி களையும் படங்களையும் காட்டலாம் என்று. அவற்றை எடுத்து வைத்துக் கொண்டேன். காரில் செல்லும்போதே திரு. தொண்டைமானுக்குச் சில பகுதிகளைப் படித்துக் காட்டினேன்; படங்களையும் காட்டி விளக்கினேன். திரு. தொண்டைமான் சொன்னார் : என்ன ரெட்டியார், கவிதையநுபவத்தை அறிவியலாக்கி விட்டீர் களே. இதைப் படிக்கும் போதே கவிதையதுபவமே காற்றில் பறந்து போய் விடும் போலிருக்கின்றதே? என்று கூற். அருகிலிருந்த கவுண்டர் அய்யாவும், ஆமா, ஆமா, நம் ரெட்டியார் எப்போதும் ஆறிவியலையே பேசுவார், யும் அறிவியல் பார்வையில் காண முயல்வார். அறிவியல் நோக்கைக் காட்டுகின்றார்.