பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苓岛盘 நினைவுக் குமிழிகள்-3 வந்து விட்டார் என் அன்னையார்.நான்கு ஐந்தாண்டுகள் தாம் அவரது வாழ்க்கையில் மன அமைதியுடன் வாழ்ந்த காலம். இரண்டு பேரன்மார்களுடன் இனிமையாகப் பொழுது போக்கினகாலம். 1958 அக்டோபர் இறுதியில் அனைத்திந்திய மொழி கள் பயிற்றும் கருத்தரங்கில்(இந்திய அரசு நடத்தியது) 10 நாட்கள் பங்கு கொண்டு திரும்பிய சில நாட்களில் நோய் வாய்ப் பட்டார் என்அன்னையார். ஒன்றிரண்டுவாரங்கள் உணவு சரியாக உட்கொள்ள வில்லை; டாக்டர் சுப்பிரமணிய அய்யரும் டாக்டர் P. K. நாராயண அய்யரும் நன்கு கவனித்துச் சிகிச்சை செய்தனர். பலன் காண முடியவில்லை. உட்கொள்ளும் தண்ணிர் கூட வயிற்றில் தங்குவதில்லை; வாந்தியாக வெளிப்பட்டு விடும். ஒருநாள் முழுவதும் (காலை 8மணி முதல் மாலை 6 மணி வரை) பேரியம் (Barium meal) உணவு கொண்டு புதிர்க்கதிர் (X-ray) சோதனைக்கு உட்படுத்தப் பெற். றார். ஒரு மணிக்கொரு முறை படம் எடுக்கப் பெற்றது. இச்சோதனையால் வயிறு இரண்டு மூன்று பகுதிகளாகப் (பலூனில் ஏற்படுவது போல) பிரிந்திருந்ததைக் கண் டார்கள். வயிற்றில் புற்றுநோய்’ (Stomach cancer) என்பது முடிவு. சிகிச்சையால் குணமாவது ஐயம் என்றும், சென்னை சென்று ஆழ்ந்த புதிர்க்கதிர் (Deep X-ray) சோதனைக்குட்படுத்தப் பெற்று அறுவை சிகிச்சை மூலம் குணமாகலாம் என்றும், அப்படிக் குணமானால் ஆயுள் முழுவதும் பால் போன்ற நீராகாரம் (Liquid diet) தான் கொள்ள முடியும் என்றும் கருத்து தெரிவித்தார்கள். என்மனம் குழம்பியது. ஆழ்ந்து சிந்தித்தேன். டாக்டர் சுப்பிரமணிய அய்யர் அநுபவத்தில் பழுத்த திறமைசாலி: துட்பமான தொழில் திறனுடன் திகழ்ந்தவர். சிகிச்சை பிடிாடில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஒரு நாள் ஆரைச் சந்தித்து, இந்த மாதிரி நிலைமை. உங்கள்