பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் அன்னையின் சிவப்பேறு r . 395。 அன்னையாருக்கு நேரிட்டால் நீங்கள் என்ன முடிவு எடுப் பீர்கள்? அறுவை சிகிச்சையை மேற்கொள்ளுவீர்களா?” என்று வினவினேன். என் வினாவைக் கேட்டு வியப்பெய்தி னார் டாக்டர். மிஸ்டர் ரெட்டியார், நன்றாகக் கேட்டீர்கள். இந்த நிலை என் அன்னையாருக்கு ஏற்பட் டால், வயது நிலையைக் கருதி அப்படியே விட்டு விடு: வேன்; அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த மாட்டேன். இறைவன் திருவருளுக்கு விட்டு விடுவேன்' என்றார். இதையேதான் நானும் நினைத்தேன். தள்ளாத வயதில் சென்னைக்குக் கொண்டுபோய் இறந்த பின் செய்யும் ஆய்வு (Postmortem)போல் செய்து, கூறு போட்டு அடக்கத்திற்குக் காரைக்குடி கொண்டு வர விரும்ப வில்லை. எவ்வளவு செலவு? எவ்வளவு முயற்சி? எல்லாம். வீண் வேலையாக முடியும் என்று தெரிந்தும், இச்செயலில் இறங்கவிரும்பவில்லை." என்று மறுமொழி பகர்ந்தேன். டாக்டரும் என் முடிவை ஆமோதித்தார். சில நாட்கள் உருண்டோடின. நான் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிலேயே தங்கின்ேன் என் ஒன்று விட்ட தம்பி கணபதியையும் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு வருமாறு பணித்தேன். இதற்கு முன்னர் இரண்டு மூன்று பெண் உறவினர்கள் வந்து ஒன்றிரண்டு நாட்கள் இருந்து திரும்பினர். செட்டியார் . நண்பர் ஒருவரைக் கொண்டு ஒதுவார் ஒருவ ருக்கு ஏற்பாடுசெய்தேன். அவர் 19 நாட்கள் காலையிலும் மாலையிலும் வந்து தேவாரம் ஓதினார்; திருவாசகம்: பாடினார். இடையில் என் தம்பி கணபதியும் தேவாரப் பாடல்கள் பாடினான். இறுதிநாள் வரை என் அன்னையார் நன்றாகப் பேசிக்கொண்டுதான் இருந்தார். நான் ஜபல்பூர் சென்றிருந்தபொழுது ஆறுகெஜம் வெண் பட்டு வாங்கி வந்து அணிந்து கொள்ளும் கொடுத்திருந்தேன். அதை ஒரு நாள் அணிந்து கொள்ளவில்லை. ஒருநாள் என்னை அழைத்து.