பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் அம்மானின் மறைவு 40? வில்லை. ஆதலால் அவரும் நானும் கோட்டாத்துார் வந்து விட்டோம். அப்போதுகூட என் அம்மான் துறை யூருக்கு வரும் போதெல்லாம் (நடைதான்; வேறு வாகன வசதி அக்காலத்தில் இல்லை; கோட்டாத்துரர் வழியாகத் தான் திரும்புவார். அக்காலத்தில் துறையூரில் சுவைக்கும் து.ாய்மைக்கும் பேர்போன கோதுமையாலான வெண்ணெய் பிஸ்கட் வாங்கிக் கொண்டு வருவார். தம் மனைவிக்குத் தாம் கோட்டாத்துரர் வந்து தம் தாயாரையும் என்னையும் பார்த்துப் போனதை தெரிவிப்பதில்லை; அவ்வளவு பயம். முதல் மனைவி என் பாட்டியுடனும் கணவனுடனும் வாழ விரும்பாமல் தம் தாய் வீடு போனதும், இரண்டாம் மருமகளுடன் வாழ விரும்பாமல் என் பாட்டி கோட்டாத் தூர் வந்ததும் என்னால் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே உள்ளது. என் பாட்டி முதல் மருமகள்ை விரட்டி விட்டாரா? இரண்டாவது மருமகள் என். பாட்டியை விரட்டி விட்டாளா? மாமியார்-மருமகள் முதல் போராட்டத்தில் மாமியார் வென்றார்: இரண்டாவது போராட்டத்தில் மருமகள் வென்றார்; உலகப் போக்கு, மனிதருக்கு மனிதர் மாறுபடுகின்றது. -- தம் தங்கை மறைவுக்குக் காரைக்குடி வந்து சென்ற அண்ணன் ஆறு திங்களில் மறைந்து விட்டார். இப்போது தந்தையின் மறைவை உணர முடியாத எனக்கு அம்மானின் பிரிவு தந்தையின் பிரிவையொத்த துக்கத்தை விளை வித்தது. ஒரே ஆண்டில் தாயின் பிரிவும் அம்மானின் பிரிவும் எனக்குத் தாங்க முடியாத துக்கத்தை விளை வித்ததை நினைவு கூர்கின்றேன். அம்மான் இறந்த செய்தி எட்டியதும் உடனே புறப்பட இயலவில்லை; அப்படிப் புறப்பட்டு வந்தாலும் பிணத்தைத்தானே ! முடியும்? ஆதலால் மறுநாள் பால் தெளிப்புக்கு , வந்து போனேன்: 16 ஆம் நாள் கருமாதிக்கும் வந்து திரு பினேன். அம்மான் மறைவுக்குப் பின்னர், அக்குடும் துடன் பந்தபாசம் அற்றது. அண்மையி நி-26 -