பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கோபிப் பயணம் 金) வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி - காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே'. என்ற பாடல்கள் சிந்தையில் குமிழியிட்டன. சேவை முடிந்த பிறகு கம்பன் அடிப்பொடி கல்வெட்டு .கள் இங்கு உள்ளனவா என்று தேடத்தொடங்கி விட்டார். “கல் சொல்லும் கதை'யை எழுதுகின்றவரல்லவா? மாலை ஐந்தரை மணிக்குக் கீழே வந்து விட்டோம். காஃபி அருந்தக்கூட நேரமின்றி உடனே கார்மூலம் சங்ககிரி நிலையம் வந்து இருப்பூர்தி வண்டி மூலம் ஈரோடு வந்து சேர்ந்தோம். நிலையத்திலேயே சிற்றுண்டி கொண்டு திருச்சி போகும் வண்டியிலேறிக் கொண்டோம். வண்டி நள்ளிரவில் திருச்சி வந்தடைந்தது. திருச்சியிலிருந்து வண்டியேறிக் காலையில் காரைக்குடி வந்தடைந்தோம். கம்பனடிப் பொடியுடன் பயணம் செய்வதில் ஒரு தனி மகிழ்ச்சி. சதா இலக்கிய விருந்து அளித்துக் கொண்டே இருப்பார். இத்தகைய பெருமகனார் இன்று நம்மிடையே இல்லை; ஐந்தாண்டுகட்கு முன்பே (28-7-1982) திருநாடு அலங்கரித்து விட்டார். நாட்டுப் பற்று, காந்தி நெறி. தமிழ்ப் பற்று, கம்பனிடத்து எல்லையற்ற ஈடுபாடு இவை யெல்லாம் கலந்த ஒரு தனி மனிதர்; இவர் ஓர் அற்புதப் பிறவி என்றே கருத வேண்டும். இந்தப் பெருமகனார் என் உள்ளத்தில் நீங்காது வாழ்கின்றான். . . . . . . . . 7. கந்தர் அலங்காரம்-76, 72 8 பிறந்த நாள் 6-6-1908 }; '. }; * : " : -