பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 நினைவுக் குமிழிகள்-3 w சங்ககிரி இருப்பூர்தி நிலையத்தில் எங்களை விடுவதற்கும் கார் ஏற்பாடு செய்தார் திரு கோதண்டராமன், நாங்கள் திருச்செங்கோடு வந்தபோது அந்த ஊரில் மாரியம்மன் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. எங்குப் பார்த் தாலும் பெருங்கூட்டம். கோடைக்காலத்தில் சேலம் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஊர்களில் மாரியம்மன் திருவிழா வழக்கமாக நடைபெற்று வரு கின்றது. வானம் பார்த்த பூமிக்குரிய வேளாண்மைப் பெருங்குடி மக்கள் மாரியம்மனை மழைக் கடவுளாகக் கருதி வழிபடுகின்றனர் என்பது அறியத் தக்கது. திருச்செங்கோட்டு மலை சற்றுச் செங்குத்தானது ஏறுவது கடினம். முழங்கால், இடுப்பு வலி தாங்க முடி வாது. எனக்கு மூச்சு வாங்கிற்று; மிகவும் களைத்துப் போனேன். அமிர்தலிங்கம் ஒரு வாறு சமாளித்துக்கொண் டார். இளைஞரல்லவா? கம்பன் அடிப்பொடி சளைக் காமல் ஏறினாலும் அவருக்கு மேல் மூச்சு-கீழ்மூச்சு வாங்கத்தான் செய்தது. நான் தான் நொண்டிமாடுபோல் பின் தங்கினவனாக வந்தேன். படிகளும் சரியாக இல்லை. ஒரு வழியாக மலை உச்சியை அடைந்து விட்டோம். சிவபெருமானையும் முருகனையும் சேவித்தோம். முருகனைச் சேவித்த போது, விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள்: மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணை முரு காவெனும் நாமம்கண் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி - வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே, சேந்தனைக் கந் தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்