பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கோபிப் பயணம் 407 கவிகள், மிகைப் பாடல்கள், அவை புதிய பதிப்பில் இடம் பெறவேண்டிய பாடல்களைப் பதம் சீர் பிரித்துப் போடு வதா. பாட வேற்றுமைகள், இதற்குக் காரணங்கள். போன்ற பல்வேறு கருத்துகள் ஆயப்பெற்றன. அவற்றை யெல்லாம் இக்குமிழியில் எழுப்ப விருப்பம் இல்லை. இக் கருத்துகள் எப்பொழுதும் இடையறாது அறிஞர்கள் சிந்தனையில் இருப்பவையே. முடிந்த முடிவாக எதையும் கொள்வதற்கு முடியாத நிலை. நான்கு நாட்கள் அடையா நெடுங்கதவுள்ள சுப்பிரமணியக் கவுண்டர் இல்லத்தில் கம்பராமாயண ஆய்வு நடைபெற்றது. ஐந்தாம் நாள்காலையில் திருவாளர் கவுண்டரிடம் விடை பெற்றுக் கொண்டோம்.இந்த இல்லத்தில் நான்சிறப்பாகக் கண்டது. ஒன்று உண்டு. எத்தனையோ வேலையாட்கள் இருந்தும் சற்றுத் தொலைவிலுள்ள வாயிலில் சாணம் தெளித்துப் பெருக்கிக் கோலம் போடும் பணியை வீட்டிலுள்ள பெண் மனிகளே செய்து வருவதை அறிந்து மகிழ்ந்தேன். நாங்கள் சென்றிருந்தபோது 3-வதுஆண்டுஎம்.பி.,பி.எஸ். பயிலும் பெண்மணி (விடுமுறைக்கு வந்திருந்தவள்) செய்து வந்ததைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தேன். இதுவல்லவா உழைப்பின் மதிப்பு (Dignity of labour)க்கு எடுத்துக் காட்டு:இலக்குமிகடாட்சமும் உண்டு என்பதும் நம்பிக்கை. ஐந்தாம் நாள் கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் க. கு. கோதண்டராமன் தங்கள் ஊர், நஞ்சைப் புளியம்பட்டிக்கு இட்டுச் சென்று எங்கட்கு விருந்தளித் தார். இந்தச் சற்பாத்திரம் இன்றும் வாழ்ந்திருப்பதைக் கண்டு நமக்குப் பெருமை அளிக்கின்றது. கம்பன் விழா நடைபெறும் பல இடங்கட்கும் சென்று சொல் விருந்து அளித்து வருகின்றார் இப்பெருமகனார்.திரு ராஜம் முதலி யோர் விடைபெற்றுச் சென்னை திரும்பினர். கம்பன் அடிப்பொடி அவர்கள் திருச்செங்கோட்டு மலையேறிப் பார்க்க வேண்டும் என்ற தம் விருப்பம் தெரிவித்தார்கள். அங்ங்னமே திருச்செங்கோடு செல்வதற்கும், மீண்டும்