பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-442 நினைவுக்குமிழிகள்-3 கண்டு என் பிரிவை வாழ்த்தினார். இவர் ஒருவரிடமிருந்து பெற்ற ஆசிதான் 100க்கு 100 விழுக்காடு உண்மையானது என்பதை அறிவேன் தமிழ்க்கடல் ராய.சொ.வும் உள்ளன் .புடன் வாழ்த்தினார்கள். . என் அன்னையார் மறைந்து ஒராண்டுக்கு மேல் (1 ஆண்டு 7 திங்கள்) ஆகின்றது. என் மனைவிக்கு வீட்டில் யாரும் பெண் துணையாக அமையவில்லை. நான் திருப்பதிப் பணியை ஏற்றல் அவளுக்குச் சிறிதும் -உடன்பாடு இல்லை. முதல் மகன் இராமலிங்கம் 6-ஆம் வகுப்பிலும் (முதல் படிவம்), இரண்டாவது மகன் இரண்டாம் வகுப்பிலும் படித்து வந்தனர். இந்த வகுப்பு களில் திருப்பதியில் படிக்க வாய்ப்பு இல்லை. ஊதியத்திலோ ஏற்றம் இல்லை. செலவோ இரட்டிப்பு. எனக்கும். ஒருவித மயக்கம் உண்டாகிவிட்டது; மனக் குழப்பம், மனத்தடுமாற்றம். திருப்பதி அழைப்பு ஏழு மலையானின் அழைப்பாகவே கருதினேன். எப்படியும் என் மனைவியைச் சரிபடுத்த வேண்டுமே. என்ன செய்வது? அழைப்பை விடுத்த ஏழுமலையான்தான் எனக்கு வழியும் காட்ட வேண்டும். . பன்மொழிப் புலவர் வேங்கடராஜுலு ரெட்டியாருக்கு நிலையை விளக்கி எழுதினேன். திருப்பதியில் எப்படியும் போய்ச் சேர்ந்து விடவேண்டும். பல்கலைக் கழக வேலை கிடைத்தற்கரிய பேறு என்று எனக்கு உருக்கமானமுறை யில் ஒரு கடிதம் எழுதுமாறு கேட்டேன். அவரும் அவ்வாறே கடிதம் எழுதினார். அதை என் மனைவிக்குக் காட்டிப் படிக்கச் செய்தேன், எனக்குச் செட்டிநாட்டுப் பகுதிகளில் பலரைத் தெரியுமாயினும், இந்த விஷயத் திற்கு அவர்கள் பயன்படார். வாணிகத் துறையில் ரெங்கூன்ஹால் முதலியார் சகோதாரர்கள், நகைக்கடை தனுஷ்கோடி செட்டியார் இவர்கள் என் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவர்களாயினும் இதில் தலையிட்டு, - தானும், செய்வார்கள் என்பதிலும்