பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி. கே. சி. பாடபேதங்கள் 69. காலத்திலேயே பலராலும் படிக்கப் பெற்று பிரசாரம் செய்யத்தக்க ஒரு நூலாகி விட்டது. இந்தக் காவியத்தில் தமிழக மக்கள் அளவு கடந்து ஈடுபட்டனர். இராமகாதை மக்கள் உள்ளத்தைக் கவர்ந்த மாதிரி ஏனைய நூல்கள் கவரவில்லை, ஏன்? இன்றும் அதே நிலையைத்தானே காண்கின்றோம்? - பக்தியினாலும், பிழைப்பின் நிமித்தமும், பெருமைக் காகவும், கல்விநயத்திற்காகவும் பாராட்டிப் பிரசாரம் செய்ய முற்பட்டவர்கள் தங்கள் தங்கள் ஏடுகளில் பாடல் ö姬》@了 எழுதி வைக்கும்போது இந்தப் பாட வேற்றுமைகள் சேர்ந்து விட்டன. ஒவ்வொருவர் ஏட்டிலும் அவரவர் விருப்பத்திற்கேற்பப் பாடல்களைத் திருத்தி ஏடுகளில் எழுதிக் கோத்து வைத்துக் கொண்டனர். சில பாடல் களைப் படிக்கும்போது அபத்தக் களஞ்சியமாகக் காட்சி அளிக்கும். கம்பனையே குறைத்துக் காட்டவும் துணை செய்வனவாகவும் அமைந்து விடும். பிற் காலத்தில் வை. மு. கோ. போன்ற பெரும் புலவர்கள் தாம் விரும்பும் பாடத்தைப் பாடல்களில் சேர்த்தும், ஏனைய வற்றை அந்தப் பாடல்களின் கீழ் பி-ம்’ என்ற தலைப் பிலும் காட்டியுள்ளனர். எனவே பாட வேற்றுமை’ என்ற கருத்து அனைவருமே ஒப்புக் கொண்ட ஒர் உண்மையாகி விட்டது. இந்தப் பாடல்களைப் படிக்கும் டி. கே சி. போன்ற சுவைஞர்கள் கம்பனைப் போன்ற ஒரு பெருங்கவிஞன் எக்காரணத்தை முன்னிட்டும் இவ்வளவு கீழான நிலையில் பாடியிருக்க முடியாது என்று எண்ணுவது இயல்பு. உண்மையும் அதுதான். ஆகவே, கம்பன் எப்படிப் பாடியிருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டியது தமிழன் ஒவ்வொரு வனுடைய கடமை. கவிதைகளில் ஒர் எழுத்தோ சொல்லோ மாறிவிழுந்து விட்டால் அதைப்படிக்கும் சுவைஞனுக்கும் அஃது உண்மையில் வேதனையைக் கொடுக்கும் என்று சொல்லத் தேவை இல்லை. கம்பன்