பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நினைவுக் குமிழிகள்-4 தடை இருந்தது. எப்படியோ நூல் முத்தொள்ளாயிர விளக்கம்’ என்ற தலைப்பில் பல்கலைக் கழக வெளியீடாக, என்னுடைய ஆங்கில ஆய்வு நூல் முகத்துடன் நவம்பர், 1965 இல் வெளி வந்தது இது என்னுடைய பதினேழாவது வெளியீடாக அமைந்தது; ஏழுமலையானின் முதல் பிரசாதமாகவும் அமைந்தது. நல்ல பாத்திரம் ஒருவருக்கு இதை அன்புபடையலாக்க நினைத்தேன். இது கிட்டத்தட்ட ஒரு பதிப்பாகவும், விளக்க உரை நூலாகவும் அமைந்ததால் தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதில் தமிழ் இலக்கிய வானில் துருவ மீன்போலத் திகழ்ந்த (அமரர்) டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அவர் கட்கு, முதலைவாய் அகப்பட்டுக் களிறு கூவ முன்வந்து புரிந்திட்ட திருமால் போலச் சிதலைவாய் அகப்பட்டுக் கலங்கி மாழ்கிச் சீர்குன்றி அகம்புறமும் நைந்து நொந்து விதலைநோய் உறுதமிழைக் காக்க வந்த வீறுடையான் சீர்சாமி நாதன் தெய்வப் பதமலரில் இந்நூலை அன்பி னோடு படைக்கின்றேன் பணிகின்றேன் வாழ்த்து கின்றேன். என்ற பாடல்மூலம் அன்புப் படையலாக்கி அப் பெருமகனார்பால் நான் கொண்டிருந்த பெருமதிப்பையும் பக்தியையும் புலப்படுத்திக் கொண்டேன். ஒரு பாடலின் விளக்கம் அது கிட்டுமா?’ என்பது தலைப்பு. 'அக்காலத்தில் 3, 6G7 6u går lofríř நீராடுவதற்கு மனைவிமார் மலைப்பொடி இடிப்பது வழக்கம், அரண்மனை யின் அந்தப்புரத்திலும் அரசரின் தேவிமார் இவ்விதச்