பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தொள்ளாயிர விளக்கம்-முகிழ்த்தல் Ꮾ 7 செயலை மேற்கொள்ளும் வழக்கம் இருந்து வந்தது. அப்படி இடிப்பதற்குத் தனியான கூடம், நல்ல வயிரத் தாலாகிய மர உரல், தங்கப்பூண் கட்டிய உலக்கை முதலிய எல்லா ஏற்பாடுகளும் இருந்து வந்தன. இடிக்கும்போது பாடுவதற்குப் பாடல்களும் இருந்தன. உலக்கை போடும்போது பாடும் பாட்டு வள்ளைப் பாட்டு’ என வழங்கி வந்தது. மூவேந்தர்களைப் பற்றியன வாக மிகப் பல வள்ளைப் பாடல்களும், கொடி தேர் முதலிய பத்து உறுப்புகளைப் பற்றிப் பாடுவதாகிய (தசாங்கமும்) அக்காலத்தில் மிகுதியாக வழங்கி வந்தன என்பதைச் சிலப்பதிகாரம் போன்ற நூல்களால் அறிய லாகும். கலித்தொகையிலும் இத்தகைய குறிப்புகள் காணக்கிடக்கின்றன. இந்தப் பாடல்களைத் தோழியருடன் பாடிக் கொண்டு மனைவியர் கண்ணம் இடிப்பர். 法 ః 兹 ஒருநாள் மங்கல முழக்கம் கேட்டு வாயிலுக்கு வருகின்றாள். நங்கையொருத்தி. தெருவில் இப்பக்கமும் அப்பக்கமுமாக நோக்குகின்றாள். ஒன்றும் காணப்பெற வில்லை. சோர்வுடன் வீட்டினுள் செல்கின்றாள். திரும்ப வும் ஒலி காதில் விழுகின்றது. ஆர்வத்துடன் மீண்டும் வெளியே வந்து தெருவாயிலின் கதவருகிலிருந்து கொண்டு அங்குமிங்கும் நோக்குகின்றாள். நெடுந்துாரத்தில் தேரின் கொடி மட்டிலும் அவளது கண்களுக்குப் புலனாகின்றது. வரவரத் தெளிவாகத் தெரிகின்றது கயற்கொடி. அந்தக் கொடியையே நோக்கிய வண்ணம் நிற்கின்றாள் அந்நங்கை. சிறிது நேரம் சென்ற பின்னர் பெரிய தேர் ஒன்று தெரிகின்றது. இன்னும் பார்த்துக் கொண்டே நிற்கின்றாள்; தேரும் நெருங்கி வந்து கொண்டி ருக்கின்றது. தேரினுள்ளிருக்கும் செம்மல் யார் என்று Tப்ாடல் சால் முத்தும் (சிலப். வஞ்சி-வாழ்த்துக் காதை-27) என்று தொடங்கும் பாடல்.பாண்டிய னைப் பற்றிய வள்ளைப் பாட்டு.