பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiw உறவினர்க்கோ, உதவுவோர்க்கோ, அன்புப் படைய லாக்குவதைக் காண்கிறோம். இன்னும் சிலர் காக்கைப் (கால், கை) பிடிப்பதற்காகத் தம் நூல்களைப் பதவியில் இருப்பவர்க்கும் அரசியல் வாதிக்கும் அன்புப் படையல் செய்வர். ஆனால் பேராசிரியர் இதில் முற்றிலும் மாறுபட்டவர். ஒவ்வொரு நூலையும் உயர்ந்த எண்ணத் தோடு, தக்க அறிஞர் பெருமக்களுக்கே அன்புப் படைய லாகியிருப்பதைக் காண்கிறோம். முனைவர் பட்டம் (பி எச். டி) இன்று மிக மலிவாக விலைபோகிறது. பதிவு செய்தவர் சற்று உழைத்து எழுதினால் போதும்; ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பட்டம் பறந்து வந்து சேருகிறது. மொழித்துறையில் அதுவும் தமிழ்த் துறையில் இந் நாட்களில் பட்டங்களுக்குப் பஞ்சமில்லை. ஆராய்ச்சிப் பொருளுக்கு ஒரு தராதரம் இல்லாமல் போய்விட்டது; உயர்ந்த சிந்தனைக்கும் பெரும் பஞ்சம். இந்நிலையில் ஆராய்ச்சிக்குப் பதிவு செய்து கொள்ள ரெட்டியார் அவர்கள் பட்ட சிரமங் களைப் படிக்கும்போது (குமிழின். 175, 177) ஒரு பக்கம் வேதனையும் மற்றொரு பக்கம் நகைப்பும் உண்டாகிறது. 'மகப்பேறு இல்லாத மங்கை யொருத்தி அரச மரத்துப் பிள்ளையாரை விடாது சுற்றி வருவதைப் போல துணைவேந்தரைச் சுற்றிச் சுற்றி வருவதை நிறுத்தவில்லை. அடிக்கடி வழக்கம்போல் காலை ஏழுமணக்கு அவர் திருமாளிகை சென்று, அவர் தரிசனம் பெற்று வருவது உண்டு. போகும் போதெல்லாம் என் கோரிக்கையைச் சொல்வது மில்லை. பேச்சுவாக்கில் இதைச் சொல்லாதும் விடுவதில்லை. (பக். 146) என்ற வரிகளைப் படிக்கும் போது பேராசிரியர் தம் விடாமுயற்சி ஒரு பக்கம் வெளிப்பட்டாலும் அவர்தம் மனவேதனையும் உணர முடிகிறது. பிள்ளைச் செல்வம்