பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiv முதலாகத் திருவேங்கடவன் பல்கலைக் கழகம் தமிழ் வளர்ச்சிக்காக ஆண்டொன்றுக்கு 10000 வீதம் மானியம் பெற்றமை நினைவு கூரத்தக்கது. டாக்டர் தேவசங்கீதம் நல்ல உழைப்பாளி. நன்கு பாடம் சொல்பவர்; ஆய்வில் விருப்பம் மிக்கவர். மாணவர்கள் நலனை நாடுபவர். நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும் பேர்போனவர். இத்த கைய நன் மாணாக்கர்பால் வில்லிபுத்துாரார் தம் மகன் வரந்தருவாரிடம் சிறப்புப் பாயிரம் பெற்றாற் போல ஒர் அணிந்துரை பெறவேண்டும் என்ற என் விருப்பத்திற் கிணங்க அணிந்துரை வழங்கியுள்ளார். தன்னா சிரியன் தன்னொடு கற்றோன் தன் மா ணாக்கன் தகுமுறை காரனென்று இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே" என்பதும் இலக்கண மரபு அன்றோ? அணிந்துரை அளித்த மாணாக்கருக்கு என் நன்றியும் வாழ்த்தும் ஆசியும் என்றும் உரியவை. இந்த நூலை எழுதி நான் வெளியிடு வதற்குத் தோன்றாத் துணையாக நின்று உதவியவன் வேங்கட வெற்பில் எழுந்தருளியிருக்கும் சீநிவாசன். இவனே எனக்கு எல்லா நலமும் அவன் விரும்பும் வண்ணம் வழங்கி வருபவன். என்னைப் பல்வேறு பாங்கில் தமிழ்ப் பணி யில் ஈடுபடுத்தி வருபவன். சமய நூல்கள் வெளிவரக் கணிசமான அளவு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் மூலம் நிதி வழக்கத் திருவருள் புரிந்தும் பிற நூல்கள் வெளிவரத் தமிழ் வ்ளர்ச்சி இயக்ககம் மூலம் ஏதோ ஒரளவு நிதி கிடைக்க வழியமைத்துத் தந்தும் என்னை வாழ் வித்து வருபவன். இந்த வேங்கடத்தின் எழில் கொள் சோதியினை, 6. நன்னூல்-51