பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்கலைக்கழகப் பணியேற்றல் £5 ஒவ்வொரு கருத்தும் நான் வினையாற்றும்போது மின் வெட்டு போல் பளிச் பளிச்" என்று ஒளிவிட்டுக் காட்டி எனக்கு மனத்திட்பத்தை நல்கும். எந்தெந்த இருப்பூர்தி ஏறி எப்படி எப்படிச் சென்றேன் என்பதை இப்போது நினைவுகூர முடியவில்லை. படுக்கை பெட்டியுடன் சென்றதை மட்டிலும் நினைந்து பார்க்க முடிகின்றது. தங்கும் அறைகள் கிடைக்கவில்லை. இப்போதுள்ள வசதிகளில் இருபதில் ஒரு பகுதி கூட அன்று இல்லை. திருப்பதியில் எவரையும் முன்னரே அறியேன். தேவஸ்தான சத்திரத்தில் "தனிக் கட்டைக்கு 'த் தனி அறை தருவதில்லை. ஆகஸ்டு முதல் தேதி அதிகாலை இரண்டரை மணி சுமாருக்குத் திருப்பதியை அடைந்த நான், இரயில் நிலையத்திலேயே உறக்கமின்றி இரயிலடி மேடைமீது கிடந்தேன். கிடந்தேன்’ என்பது பொருள் பொதிந்த சோல். நீள நினைந்து ஊன்றிப் பொருள் கொண்டால் என் நிலையை உணரலாம். கடல் மல்லைக் கிடக்கும் கரும்பு போல் தலசயனப் பெருமாளாகக் கிடந்தேன்! இரயிலடியிலிருந்து அதிகாலை 4 மணிக்கு வெளிவந்ததும் முதலில் என் கண்ணில் பட்டவர் தேநீர் கடை வைத்திருந்த ஒரு வடநாட்டுக்காரர். நன்றாகத் தமிழ் பேசுபவர். அவர் வாடகைக்கு அறைகள் கிடைப்பதரிது என்பதை விளக்கினார். என் பொருள்கட்குப் பாதுகாப்பு தந்தார். தேவஸ்தான சத்திரத்தில் கட்டணம் செலுத்திக் குளிக்கலாம் என்று விளக்கினார். இரயில் நிலையத் திலேயே காலைக்கடன்களை முடித்துக் கொண்டு சத்திரத்தில் சென்று குளித்து வேலையை முடித்துக் கொண்டேன். ஏழுமலையானைத் தரிசிக்காமல் வேலையில் சேர மனம் ஒப்பவில்லை. மலைக்குச் செல்ல ஆற்றுப்படுத் தினார் சேட். பேருந்து உடனே கிடைத்தது. காலை ஆறு மணிக்குத் திருமலையை அடைந்து விட்டேன். ஏழு மணிக்குத் தரிசனம் முடிந்தது.