பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翁 நினைவுக் குவிதிகள்-4 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பஈ! நிகரில் புகழாய்! உலகமூன்று உடையாய் என்னை ஆள்வானே! நிகரில் அமரர் முனிக்கனங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! புகலொன் (று) இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே." என்ற பாசுரத்தைப் பாடிச் சேவித்தேன். இப்பாசுரம் *பிரபத்தி நெறியின் உயிரான பாசுரம் என்று அப்போது எனக்குத் தெரியாது. மனம் நெகிழ்ந்த நிலையில் திருக் கோயிலை விட்டு வெளியில் வந்தேன். உடனே பேருந்தும் கிடைத்தது. எட்டுமணிக்குத் திருப்பதி வந்து விட்டேன். வேங்கடேச பவன்’ என்ற அருகிலுள்ள பாலக்காட்டு அய்யர் உணவு விடுதியில் காலை எட்டு மணிக்கே உணவு கிடைக்கும் என்றார் சேட். உணவை 9 மணிக்குள் முடித்துக் கொண்டு பல்கலைக் கழகத்திற்குப் போகத் தயாரானேன் . சைக்கிள் ரிக்ஷா ஒன்றை அமர்த்திக் கொண்டு சரியாகப் பத்து மணிக்குக் கல்லூரிக்குப் போய்ச் சேர்த்தேன். பல்கலைக்கழக அமைப்பைப்பற்றிச் சிறிது பகர்தல் இன்றியமையாதது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக அமைப்பினின்றும் சிறிது வேறுபட்டது திருவேங்கடவன் பல்கலைக்கழகம். தமிழகத்தின் பல்கலைக் கழகத்தை யொட்டிக் கல்லூர் அமைப்பு இல்லை. ஆனால் திருப்பதி யில் பல்கலைக்கழகக் கல்லூரி என்ற ஓர் அமைப்பு உண்டு. இதற்கு முதல்வர் என்ற ஒருவரும் உண்டு. துறைகள் யாவும் இவருடைய கிபாறுப்பில் இருக்கும். இரண்டு அல்லது மூன்றாண்டுக்கு ஒருமுறை பல துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களில் ஒருவர் சுழல் முறையில் வரிசை 4, திருவாப் 6. I 0: I #