பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தரைச் சந்தித்தல் 17 என்னால் செய்யமுடியாமல் போனாலும் என் செல்வாக் கால் என் நண்பர்களைக் கொண்டு செய்விப்பேன்’ என்று உறுதியாகச் சொன்னார். உடனே எனக்கு வள்ளுவர் வாக்கு நினைவிற்கு வந்தது. முகநக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.’ என்ற குறள் திரு.பலராமரெட்டியை நினைக்கும் போதெல்லாம் என் மனத்தில் எழும். அதனால் இரண்டும். (அகமும் முகமும்) ஒருங்கே மலர வேண்டும் என்பது பெற்றாம் என்ற பரிமேலழகரின் உரைக்குறிப்பிற்கும் இவர் ஒர் இலக்கியம் போல் திகழ்ந்ததைத் திருப்பதியில் இருந்த வரை நினைந்து நினைந்து மகிழ்வேன். நான் திருப்பதியிலிருந்தவரை-பதினேழு ஆண்டுக் காலம்எந்த உதவியையும் இவரிடம் பெறவில்லை; எவரிடமும் பெறவில்லை. நல்லதோ கெட்டதோ எது வந்தாலும் என் காவில் தின்றே சமாளித்துக் கொள்வேன். எந்தச் செயலில் இறங்கினாலும் ஏழுமலையான்மீது பாரத்தைப்போட்டுச் செயற்படுவேன். பலனையும் அவனுக்கே விட்டுவிட்ட பிறகு எனக்கு எந்தக் கவலையும் ஏற்படுவதில்லை. மலை போன்ற சிரமம் வந்தாலும் அதைக் கொசுபோலத்தட்டி விட்டுவிடுவேன். இறுதியில் முடிவு நல்லதாகவே அமையும். எந்தச் செயலிலும் தவறான வழிகளைக் கையாள்வது. மில்லை; குறுக்குவழிகளில் செல்லத்துணிவதுமில்லை. திரு. பலராமரெட்டி எனக்கு ஒர் எச்சரிக்கையையும் தந்தார்: மிஸ்டர் ரெட்டியார் என்னிடம் பழகுவது திரு. கோவிந்தராஜுலு நாயுடுவிற்குத் தெரியாமலிருக்க வேண்டும். தெருவில் செல்லும்போது வணக்கம் கூடத் தெரிவிக்க வேண்டா. நான் பல்கலைக்கழக வளாகத்திற்கு வருங்கால் என்னைக் கண்டு கொள்ளாமல் இருந்துவிடுங் கள். கழுகுகள் போல் பல உளவாளிகள் உள்ளனர். அவர் 2. குறள்-786. 2 ۔ سائم