பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தரைச் சந்தித்தல் 19 தில்லை; மனநிலையையும் குலைப்பதில்லை. திருப்பதி ஆயிலும் இதே நிலைதான், பழகுவதற்கு ஒரு சிலரே என் கண்ணில் பட்டனர். அவர்களிடம் மட்டிலுமே நல்லுறவு நெருங்கிய தொடர்பு-கொண்டிருந்தேன். பல்கலைக் கழகத்திலும் சிலரிடம்தான் நெருங்கின பழக்கம் ஏற் பட்டது. எல்லோரிடமும் நன்றாகத்தான் பழகுவேன். "பட்டுகத்தரித்துபோல் வெட்டிக் கொள்வேன். இதனால் எனக்கு பல்கலைக் கழக வளாகத்தில் நல்ல மதிப்பு இருந்தது; பெரும்புகழுடன் பதினேழு ஆண்டுகள் கழிந்தன. திரு. முனிரெட்டி அவர்களையும் அவர் இல்லத்தில் சந்தித்தபோது அவரும் மிகவும் இன்முகத்துடன் உரையாடினார். திரு. பலராமரெட்டி என்னிடம் தமிழில் பேசி மகிழ்வார்; அவர் பேசும் தமிழும் சுமாராக இருக்கும். ஆனால் முனிரெட்டியிடம் நான் தெலுங்கில் தான் பேச்சினைத் தொடங்கினேன். குறைபாடுள்ள தமிழ்ஒலியுடன் கூடின-என் பேச்சுத் தெலுங்கு- அவரை மகிழ்விக்கும். அவர் நல்ல தெலுங்கில் என்னிடம் பேக் வார் திருப்பதியிலிருந்தவரை அவரிடம் தெலுங்கில்தான் பேசுவேன். நகராண்மைக் கழகத் தலைவர் என்ற முறை யில்தான் இவரிடம் பழகினேனேயன்றி சாதிப்பற்று (அல்லது வெறி?) இங்ங்னம் பழகுவதற்குத் துாண்டவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரிடம் பழகின சில மாதங்களிலேயே இவருடைய உதவியை நாட வேண்டியிருந்தது. நான் தங்கியிருந்த அறை தீர்த்த கட்டத் தெருவின் தென்கோடியில் காந்திச் சாலையைச் சந்திக்கும் இடத்தில் இருந்தது. தீர்த்தகட்டத் தெரு தென்வடலாகவும் காந்தி சாலை கிழக்கு மேற்காகவும் அமைந்திருந்தன. என் அறைக்குக் கீழ்ப்புறத்தில் தெருவையொட்டி ஆரோக்கிய பவன்' என்ற சிற்றுண்டி விடுதி இருந்தது: கர்நாடக மாநிலத்தை சார்ந்த அந்தனர்