பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதியில் ல்ருத்தலப் பயணிகள் 3 I என்று நெஞ்சுருகப் பாடிக் களிப்பேன். யான் இங்ங்னம் பெறும் இறையநுபவத்தை என் சொற்களால் எடுத்துக் காட்ட முடிவதில்லை. பின் உள் மண்டபத்தில், திருச்சுற்று இடங்களில், இன்னும் தோன் றிய இடங்களிலெல்லாம் அமர்ந்து எதை எதையோ சிந்தித்த வண்ணம் இருப்பேன். சில சமயம் திருத்தலப் பயணிகளில் சிலர் வந்து என்னிடம் அமர் வார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுப்பேன். நாட்டு நடப்புகள், மழை விவரங்கள், வேளாண்மை, வாணிகம், கைத்தொழில்கள் போன்றவற்றில் பேச்சுகள் நடை பெறும். இப்படிச் சில நேரங்கள் கழியும், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரயிலடியில் போடப் பெற்றி ருக்கும் பெஞ்சியில் அமர்ந்து பயணிகளின் நடவடிக்கை களைக் கவனிப்பேன். ஆனால் இன்றிருப்பதுபோல் அதிக வண்டிகள் அன்று இல்லை. இரயிலடியில் ஒரே ஒரு மேடை தான் இருந்தது. எவற்றையோ கண்டு களிப்பவன்போல் (Spectator) உட்கார்ந்து கொண்டு நேரம் போக்குவேன்; நேரம் போவதே தெரியாது. இப்படிச் சில நாட்கள் செல்லும். நாட்டுப் புறங்களிலிருந்து வரும் பெரும்பாலான திருத்தலப் பயணிகளிடம் தூய்மை இல்லை. உண்ண ல், உடுத்தல், பருகுதல் போன்ற செயல்களிலும் தூய்மையைக் காணல் இயலாது. பெரும்பாலும் இவர்கள் பேருந்தை எதிர் பார்ப்பதே இல்லை. அதிகாலையில் எழுந்து (கோடைக் காலமானால் நிலவு காயும் இரவிலேயே) தங்கள் மலைப்பயணத்தைத் தொடங்குவார்கள். பெரும் பாலும் இவர்கள் இரயிலடி, கோனேற்றுக்கரை போன்ற இடங்களிலிருந்து கிளம்புவார்கள். கோவிந்தா, கோவிந்தா' என்று விண்ணை முட்டும் முழக்கத்துடன் கிளம்புவார்கள். மலையின் நடைபாதையெல்லாம் இப்படியே இரவு முழுதும் நடந்தே செல்வார்கள். திருமலையில் தேவஸ்தான சத்திரங்களில் இலவச அறை