பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 நினைவுக் குமிழிகள்-4 எந்தத் துறையிலும் ஆய்வு மன நிலை உடையவர்களை என்னால் காணமுடியவில்லை. பெரும்பாலோர் செயலில் தம் திறமையை வெளிப்படுத்தாமல் துணைவேந்தரைக் 'காக்கை (கால், கை) பிடித்தலில் போட்டி போட்டுக் கொண்டிருந்ததை என்னால் காண முடிந்தது. போட்டி போட்டுக் கொண்டு கூட்டங்களை அமைத்தல் அந்தக் கூட்டங்கட்குத் துணைவேந்தரைத் தலைமை தாங்குமாறு அழைத்தல் போன்ற செயலில் சுறுசுறுப்பாக இயங்கி வருவதைக் கண்டேன். இதில் பொதுவாக நாயுடு வகுப்பைச் சேர்ந்தவருக்கு, குறிப்பாக துணை வேந்தர் வகுப்பைச் சேர்ந்தவர்கட்கு, எல்லா நிலைகளிலுமே சலுகைகள் காட்டப் பெற்று வருவதும் வெள்ளிடை விலங்கலாகக் காணப்பட்டது. இவற்றையெல்லாம் கண்ணுறும் எனக்குச் சிரிப்பு தான் வந்தது. உள்ளுர நகைத்துக் கொள்வேன். படித்தவர்களிடமே அக்கிரமங் கள், அடாத செயல்களைக் கண்ணுறும்பொழுது என் உள்ளம் கொதித்தெழும். என்ன செய்வது? எல்லாவற்றை "ஹாஸ்யமாகவே' கொண்டு பாரதியார், படித்தவன் குதும் பாவமும் பண்ணினால் போவான், போவான், ஐயோவென்று போவான் : என்று குடுகுடுப்பாண்டி வாயில் வைத்துப் பேசுவதை நினைத்துக் கொள்வேன். மலையின் மேல் கோயில் கொண்டிருக்கும் ஏழுமலையான் கண்களில் இவை யெல்லாம் படவில்லையோ என்று ஏங்கிக் கிடப்பேன். தேவஸ்தானத்தில் நடைபெறும் அட்டூழியங்களைச் சரிப்படுத்த முடியாது பார்த்துக் கொண்டிருக்கும் அவனுக்குப் பல்கலைக் கழகத்தின்மீது கவனம் செலுத்த நேரம் ஏது? அவரவர்கள் பிராரித்தப்படி பாவம் பண்ணட்டும் என்று எண்ணிக் கொண்டானோ என்று கூட என்மனம் எண்ணத் தொடங்கியது. இந்நிலையில் 1. பா.பா. ப.பா-புதிய கோணங்கி-2