பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று நூல்களின் வெளியீடு 61 பாங்குறும் பயிற்சிக் கலைக்கொரு தலைவன் பண்புசால் துரைக்கண்ணு நம்பி தேங்கலந் தொளிரும் நட்பினுக் கணியாய்த் தேசுபெற் றொளிர்கஇந் நூலே. என்ற பாடலால் அன்புப் படையலாக்கப் பெற்றது. இஃது என்னுடைய ஒன்பதாவது வெளியீடாகும். கவிதையநுபவம்' இதனையடுத்து நிறைவு பெற்றது" பாட்டெல்லாம் அறிவு நிலையைப் பற்றிக் கொண்டு போய் உயிர்களின் உணர்வு நிலையைத் தட்டி எழுப்பி விடுவதாகும். உரையெல்லாம் அறிவு நிலையைப்பற்றி நிகழுமேயல்லது அதன்மேற்சென்று உணர்வு நிலையைத் தொடமாட்டாதாகும்’’’ என்பர் மறைமலையடிகள். ஆகவே, நாம் தமிழால் பெறும் இன்பம் கவிதையாய் பெறும் இன்பமே இதுவே கவிதையதுபவமாகும். இந்நூல் நிறைவு பெற்றதும் பன்மொழிப் புலவர் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரின் அணிந்துரையையும் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியாரின் ஆங்கில அணிந்துரை யையும் (Foreword) பெற்றுச் சென்னைப் பல்கலைக் கழகத் தன்னேரில்லாத துணைவேந்தர் ஆ. இலக்குணசாமி முதலியாருக்கு, தேங்கமழ்தன் துளபமணி மாயற் கன்பர்; சீர்சான்ற மருத்துவத்தின் இணையே இல்லார்: ஆங்கிலமாம் பெருங்கடலின் ஆழங் கண்டார்; அரியதமிழ்ப் பண்பாட்டின் உருவம் போல் வார் ஓங்குசென்னைப் பல்கலைசேர் கழகம் வாழ உறுபணிசெய் துணைவேந்தர்; வீறுபெற்ற வேங்கடம்நேர் இலக்குமண சாமி என்னும் வித்தகருக் கித்தனிநூல் உரிமை யாகும். 3. பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை-பக்(7-8)