பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎盛 நினைவுக் குமிழிகள்-4 என்ற பாடலால் அன்புப் படையலாக்கினேன். காரணம் என் வீர வழிபாடே..சற்றேறக்குறைய அரைநூற்றாண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழக வளர்ச்சியில் பல்வேறு நிலைகளில் நின்று பங்கு கொண்டவர்கள். சேவைக்கும் அதனையாற்றும் திறமைக்கும் இராமகாதையின் இளைய நம்பியையொத்தவர்கள். பல்கலைக் கழகத்தின் தரம் குறையாமல் பல்லாற்றானும் மிகக் கவனமாகக் காத்து வந்தவர்கள். அரசியலிலும் இவருக்குப் பங்கு இருந்தது. பல்லாண்டுகளாக தமிழக மேலவையின் எதிர்க்கட்சித் தலைவராகநின்று நிகழ்த்திய பேருரைகள் வாதப் போர்கள் அவையின் தரத்தையே உயர்த்தி வந்ததை இந்திய மண் அறியும்; வெளிநாட்டு அறிஞர்களும் நன்கு அறிவார்கள். ஐ. நா.வைச் சார்ந்த உலக சுகாதாரக் கழகத்தின் (WHO) பல்லாண்டுகள் உறுப்பினராகவும் சில ஆண்டுகள் அதன் தலைவராகவும் இருந்து ஆற்றிய பணிகளை உலக நாடுகள் நன்கு அறியும். இவற்றின் அறிகுறியாக, யான் இவர் பால் கொண்ட மதிப்புக்கும் மரியாதைக்கும் அறிகுறியாக இந்நூலை இப்பெரு மகனாருக்கு அன்புப் படையலாக்கினேன். இஃது என்னுடைய பத்தாவது வெளியீடாகும் (மே, 1961) .