பக்கம்:நினைவுச்சரம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் }{}3.

பார்த்து விழித்தபடி இருந்தார் மற்றவர். என்ன அண்ணுச்சி என்ன?’ என்ருர்,

மன. பெளு. சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்குர்: ‘நம்ம ஊர்காரனுக எப்பவுமே பேரு வைக்கிறதிலே எமப் பளுவனுகதான். ஆளுக குணத்தை அறிஞ்சு, அல்லது. உருவம் சுபாவம்களுக்குத் தக்கபடி, பொருத்தமான பேரா வச்சுப்போடுருங்க. அவங்க அவங்க சொந்தப் பேரு, வீட்டுப் பேரு, வழங்கும் பேரு இதுகளே எல்லாம் தூக்கி முழுங்கிட்டு இந்தப் பட்டப் பேரு அடிபடுவதும் சகஜமாயிடுது. அப்பளம் அமுக்கின்னதும் அவரு ஞாபகம் வந்திட்டுது. ஆறுமுகம் பிள்ளைக்கு ஏன் அந்தப் பேரு வந்தது, உமக்குத் தெரியுமா?

சரியான காரணம் எனக்குத் தெரியாது. எப்பவோ ஒரு சமயத்திலே எங்காவது ஒரு கடையிலோ, அல்லது அப்பளம் போட்டு விக்கிறவ வீட்டிலேயோ அப்பளத்தை அமுக்கி, அகப்பட்டுக்கிட்டு முழிச்சிருந்திருப்பாரு ; அதிலேயிருந்து அவருக்கு அந்தப் பேரு வந்திருக்கும்னு நாணு நெனச்சுக்கிட். டேன் என்று பால்வண்ணர் தெரிவித்தார்.

அப்படியில்லே விசயம், உள்ளே வாரும் சொல்லுதேன்’ என்று அண்ணுச்சி முன்னே நடக்க, தம்பியாபிள்ளே யின் தொடர்ந்தார். அவரவருக்கு உரிய இடத்தில் வசதியாக அமர்ந்ததும் மன. பென. ஆரம்பித்தார்:

அப்போ ஆறுமுகம் பிள்ளைக்கு பன்னிரண்டு பதிமூனு, வயசுதான் இருக்கும். வீட்டிலே நல்ல சாப்பாடு, எண்ணே யிலே பொறிச்ச அப்பளம்லாம் கிடைக்காது. அநேகநாள் வெறும் புளித்தண்ணியும் சோறும்தான். அப்பளம் இருந்: தால் அடுப்புக் கங்குலே சுட்டு எடுத்துவைப்பா அம்மாக்காரி. ரொம்பவும் கஷ்டப்பட்ட குடும்பம்னு சொல்றதுக்கில்லே. போதுமான வசதிகள் இல்லாத நிலைமை. புள்ளேகுட்டி ஜாஸ்தி. எப்படியோ நேத்தியப்பாடு கழிஞ்சுது, இன்னையப் பாடு கழியுதுன்னு கட்டும் செட்டுமா வாழ்க்கை நடத்தியாக வேண்டிய ஒரு கட்டாயம் அந்தக் குடும்பத்துக்கு இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/103&oldid=589347" இலிருந்து மீள்விக்கப்பட்டது