பக்கம்:நினைவுச்சரம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*? : }{}5,

தான்னு பேரு வந்தது. சோமநாதபிள்ளேன்னு ஒருத்தர் இருந்தாரு. சோறு தின்னதும் நிறைய தண்ணி குடிச்சிடு வாரு ஒரு செம்புத்தண்ணி குடிப்பாரு. பிறகு எதுக்களிச்சு எதுக்களிச்சு தண்ணியை துப்பிக்கிட்டே இருப்பாரு. அதிலே பருக்கைகளும் சேர்ந்து வந்து விழும். அதனுலே அவருக்கு இரை கக்கியாபிள்ளேயின்னு பேரு வந்துட்டுது.”

தாதன்குளித்துக்காரரு ஒருத்தரு சில வருசம் முன்னே இங்கே வந்து குடியிருந்தாரு பிழைப்பு தேடி வந்தவர்தான். ஞானசம்பந்தம்னு பேரு. அவரு பேசும்போது வாய்க்கடை களிலே, வாயின் இரண்டு பக்க உதட்டு ஒரங்களிலும் எச்சில் துரைத்துக்கொண்டு கிளம்பும். அவரை சாளவாய் ஞானசம் பந்தம்னுதான் எல்லோரும் சொல்றது வழக்கம். இந்த ஊரிலே காப்பி கிளப் நடத்த முடியுமான்னு பார்த்தாரு. முடி யலே அப்புறம் நீவைகுண்டத்துக்கோ, கோவில்பட்டிக்கோ போயிட்டதாகச் சொன்னங்க என்று பால்வண்ணர் ஒரு தகவல் தந்தார். -

அதுதான், யாராவும் இருக்கட்டுமே. பொருத்தமான பேரு வச்சுப்போடுவாங்க. பொம்பிளேகளும் தங்களுக்குள்ளே தனிப்பேரு வச்சிருப்பாளுக. அதை சாட்டித்தான் பேசு வாளுக, பரும் பாம்படக்ககாரி, வட்டக்கண்ணி, பெருமைக் கார மீளுட்சி-இப்படி விதம்விதமா இருக்கும். ஒருத்தி காது கொள்ளாமல் தொங்கத் தொங்க,தோளிலே வந்து புரளும்படி தண்டிதண்டிய பாம்படம் போட்டிருந்தா. அவளே எல் லோரும் பரும் பாம்படக்காரின்னுதான் குறிப்பிடுவாங்க..?

ஆமண்ணுச்சி, இப்போ இந்தப் பாம்படம்கிற நகை அவ்வளவாக் கண்ணிலே படுறதில்லே, கவனிச் சேளா ? வயசான பொம்பிளேக சிலபேரு காதுகளிலே காணப்படுது, இளந்தலே முறைப் பொம்பிளேகளிலே யாருமே காது வளக்கிறதுமில்லே, பாம்படம் போட்டுக்கிடறதும் இல்லே என்ருர் பால்வண்ணர்.

முன்னலே அதுதான் சில சாதிகளின் நீங்காத வழக் கமா இருந்துது ஏழு வயசு, எட்டு வயசிலேயே காதை

பூ-108-தி-7 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/105&oldid=589349" இலிருந்து மீள்விக்கப்பட்டது