பக்கம்:நினைவுச்சரம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரம் #37

விரித்து புகையிலையை உலர வைக்கிறதை தினசரி பார்த்

ماده

திருக்கேன். சதசதன்னு, கறுப்பாகி, ஈ மொய்ச்சுக்கிட்டு

பார்க்க சகிக்காது. இதை எப்படித்தான் விரல்களால் பிச்சுப் பிச்சு வாயில் போடுருங்களோ என்று நினைப்பு எனக்கு அதை பார்க்கும்போதெல்லாம் உண்டாகும் என்று பால்வண்ணர்

கருப்பட்டிப் புகையிலே பேச்சு எழுந்த சமயத்தில் அங்கு வந்து சேர்ந்திருந்த சுகவாசி சூரியன் பிள்ளே இப்போது குரல் கொடுத்தார் : கொத்துப் புகையிலே, தடைப் புகையில், அழகு அழகான பொட்டலங்களில் வரும் வெள்ளேப் புகை யிலே...பக்குவப்படுத்தப்பட்ட துணுக்குகள் எல்லாம் நாகரிக காலத்துக்கு ஏற்றதாயிட்டுது. அதுேைல கருப்பட்டி புகை ஆயிலே போன இடம் புல்லு முனேச்சிப்போச்சு என்ருர்.

பேரு வைக்கிறது பத்தியில்லா சொல்லிக்கிட்டிருந் தேன் முதல்லே. ஒரு பையன் என் பேரை பீக்காக் ரைடர்லு மாத்தியிருக்கானே அதுகூட பழைய வழக்கத்தை ஒட்டித் தான் வந்திருக்கு. மயில் ஏறும் பெருமாள் என்பதுக் பிக்காக் ரைடிங் பிக் ஃபெல்லோ (Peacock Riding Bது Fellow) என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். என்பதனாலோ, அல்லது இதுவே போதும் என்ருே என்னே வெறும் பீக்காக் ரைடர் ஆக்கிப்போட்டானுக பையனுக என்று சொல்லிச் சிரித்தார் அவர்.

சுத்தச் சின்னப்பயலுக!’ என்ருர் பட்டுலேஞ்சி. இதிலே கோபப்படுறதுக்கு ஒண்னுமே இல்லே என்று இயல்பாகப் பேசினர் மன. பென. சின்னப் பையனுகளின் சுபாவமே அதுதான். நாங்க வைக்காத பேரா! பண்ணுத கேலியா! அரசப்பிள்ளே என்கிறவரை கிங் ஃபாதர் (Airg Father): தான் குறிப்பிடுவோம். செந்தலேக் கட்டையான்னு ஒருத்தி இருந்தா. செத்தலேக்கட்டை என்ற ஊரிலிருந்து வந்தவ. அவளே ரெட் ஹெட் வுட் (Red Head Wood) என்று தான் பேசுவோம். பெரியப்பாவை Big என்போம். Big நிக்குதே, Big எங்கோ கிளம்பிட்டுது என்று, திரிபுரசுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/107&oldid=589351" இலிருந்து மீள்விக்கப்பட்டது