பக்கம்:நினைவுச்சரம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 30g

'ஊரு ரொம்பக் கெட்டுப் போகுது அண்ணுச்சி. ஊருன்ன நம்ம ஊரை சொல்லலே. பொதுவாச் சொல்லுதேன்’ என்று புலம்பியபடி வந்து நின்ற பிறவிப் பெருமாள் பிள்ளே பள்ளிக் கூடத்துப் பையன்களின் போக்குகள் பற்றிக் குறை கூறினர். ஸ்ட்ரைக்காம். அதுக்காக பஸ்களே ஒடவிடாமல், மறிக் கிருனுக, நாகர்கோவில் பஸ் ஒன்றை நிறுத்தி, ஆட்களே இறங்கச் சொல்லி, பஸ்ஸுக்கு தீ வச்சுக் கொளுத்திட்டானுக. இதெல்லாம் என்ன வேலே? படிக்கிற பையனுகளா லெச்சணமா இருக்கிறதை விட்டுப் போட்டு...?

‘எப்பவுமே படிக்கிற பையனுக, படிக்க விரும்பாமலே பள்ளிக்கூடம் போற பையனுக என்று இரண்டு இனம் உண்டு. முன்பு படிக்கிற பையனுக நெறய இருந்தாங்க. நாங்களும் படிக்கப் போருேம்னு சொல்லிக்கிட்டு சும்மஞச்சியும் பள்ளிக் கூடம் போயி ஜாலி-ரகளே-கலாட்டா பண்றவங்க குறைச்சலா, ஒரு வகுப்புக்கு ஒண்னு ரெண்டு பேரு இருந்தாங்க. இப்போ அவங்களே மெஜாரிட்டி ஆயிட்டாங்க. உண்மையாப் படிக்க ஆசைப்படுறவங்களேயும் படிக்க விடாமல் கெடுக்கிருங்க” என்று பெரிய பிள்ளே கூறினர்.

ஷேப்டர் (Schafter ஸ்கூல்லே, உள்ளே நுழைகிறதுக்கு முன்னுடி ஆர்ச்சுக்கு மேலே எழுதி வச்சிருக்கானே Disce Aut Discede என்று, அது நல்ல உபதேசம்னு தோணுது. அது 50 $ $sör ursp6); ; Learn or Leave out 6T6ğrgi <B;#355thgi முன்பு பாளேயங்கோட்டை வாத்தியார் ஒருத்தர் சொன்னர். ஏ, பள்ளிக்கூடம்கிறது படிக்கிறதுக்காக ஏற்பட்டது. படிக்க வாறியா-ஒழுங்காப்படி. படிக்க இஷ்டமில்லாம கழுதைப் புரளி பண்ணனும்னு நெனக்கியா? அதை வெளியே போயி செய்யி ; இங்கே இருந்துக்கிட்டு மத்தவங்களுக்கு இடைஞ்சல் பண்ணுதேன்னு அது தெரிவிக்குது என்றும் அவரு சொன்னுரு ஒழுங்காப் படிச்சு முன்னேறனும்னு ஆசைப் படுறவங்க மட்டும் தான் பள்ளிக்கூடத்துக்குப் போகணும். அதை விட்டுப் போட்டு, படிக்கப் போருேம்னு போறது ; பிறகு, ஸ்ட்ரைக், பள்ளிக்கூடம் போகாதேயின்னு கலாட்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/109&oldid=589353" இலிருந்து மீள்விக்கப்பட்டது