பக்கம்:நினைவுச்சரம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

彦萝塾 32

நாற்பது வருஷகாலம் இந்த ஊரையே எட்டிப் பார்க்காமல் இருந்தார்? ஏன் இப்போ பெண்டாட்டியை அழைத்து வராமல், தான்மட்டும் வந்து தனியாகத் தங்கி இருக்கிருர் ே

வேப்பமரத்து வீட்டு மயிலுப்பிள்ளே வாழ்க்கையில் மறைந்து கிடக்கிற இந்த ரகசியங்களே அறியாவிட்டால், தங்கள் தலே வெடித்துவிடும் என்பது போன்ற ஒரு உணர்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் ஏற்பட்டிருப் பதாகவே தோன்றியது. அவர்களது ஐயப்பாடுகளேயும், மூடு பேச்சுகளையும் கேட்க நேரிட்ட சிறுவர் சிறுமிகளையும் இது தொத்துநோய் மாதிரி பற்றிப் படர்ந்தது.

நேரடியாக மயிலேறும் பெருமாள் பிள்ளையிடமே கேட்டு விட்டால் இந்த விவகாரம் மிகச் சுலபமாகத் தீர்ந்துவிடும் தான். ஆனல் அவர் உள்ளதை சொல்லுவார் என்பது என்ன திச்சயம்? பொய்யான கதை எதையாவது சொல்லி, கண் துடைப்பு வேல்பண்ணி, பிரச்னையை திசை திருப்பிவிட மாட்டார் அவர் என்று எப்படிச் சொல்லமுடியும்? எனவே, வேறு யார் மூலமாகவாவதுதான் நிசத்தை அறியமுடியும்அறியவேண்டும் என்று அக்கப்போர் பக்தர்கள் ஆசைப் பட்டார்கள்.

அந்தக் காலத்து மயிலேறுவின் போக்குகளே அறிந்து வைத்திருந்தவர்கள் சிவபுரத்தில் யாருமே இல்லை என்று பட்டது.

கண் தெரியாத, காதும் கேட்காத, வங்கிழடு ஒன்று இருந்தது. அந்தத் தாத்தாவின் முளேயில் இந்த விஷயத்தை பதிய வைப்பதற்குள் பால்வண்ணம் பிள்ளையின் பாடு பெரும் பாடு ஆகிவிட்டது. அவ்வளவு சிரமத்துக்கு உரிய பலனும் கிடைக்கவில்லை.

ஒகோ, மயிலேறு ஊரோடு வந்துட்டான? வரவேண் டியதுதானே ! அப்பா கட்டிவைத்த மடம் மாதிரியான வீட்டை பூட்டிப் போட்டுட்டு அவன் ஏன் அசலூரிலே காலம் தள்ளனும்? அவன் ஏன் போனுன்னு கேக்கயா? என்ன

8. - سS)1 سای

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/121&oldid=589365" இலிருந்து மீள்விக்கப்பட்டது