பக்கம்:நினைவுச்சரம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயலூர்களிலிருந்து வந்து அவர்கள் வீட்டில் ஒருநாள் இரண்டு நாள் தங்குகிறபோது, சுவையாக மூட்டை அவிழ்த்து உலுப்பு வதற்குப் போதுமான செய்திகள் இரு சாராரிடமும் உண்டு. அயலூர் சரக்குகளே அதிதிகள் இங்கே அவிழ்த்துவிட்டு இவ்வூர் விஷயங்களே மூட்டை கட்டிக்கொண்டு போய் சேரு வார்கள். இப்படியாக, உண்மையானவும் பொய்யானவு மான-நடைமுறையில் நிகழ்ந்தனவும், என்றுமே நிகழா தனவுமான-சமாச்சாரங்கள் உயிர்ப்போடு எங்கும் உலாவு வதற்கு மனிதர்களின் பண்பாடு துணே புரிந்து கொண் டிருந்தது.

பொம்பிளேகள் பிறப்பித்துவிடுகிற-கண்ணு மூக்கு, காது வாய், கால் கை எல்லாம் வைத்து உருட்டித் திரட்டி உலாவ: விடுகிற-இந்த ரக அக்கப்போர்களே ஆண்கள் ஆசையோடு ஏற்று, சீராட்டிப் பாராட்டி, தங்களால் இயன்ற அளவு ஜோடனைகளும் சேர்த்து நெடுக நடமாட விடுவதில் ஊக்கமும் உற்சாகமும் காட்டுவது வழக்கம்.

சிவபுரம் பெண்ணின் அல்லது ஆணின் பேச்சுகளே கேட். கிறபோது, இந்த ஊரிலே ஒழுக்கமானவர், யோக்கிய மானவர் ஒருவர்கூடக் கிடையாது போலிருக்கு என்ற எண்ணம்தான் கேட்பவருக்கு உண்டாகும்.

அப்படி சுவாரஸ்யமாக மற்றவர்களைப் பற்றிப் பேசுகிறவர் களும் இப்படித்தானே இருப்பார்கள் என்று கேட்பவர் சந்தேகம் கொள்ளக் கூடுமே என்ற நினைப்பு ஒரு சிறிதுகூட. இல்லாமல், ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும் ஊரில் உள்ள மற்ற ஆம்பிளேகளையும் பொம்பிளேகளேயும் பற்றி வம்பு பேசு. வதிலும், கதை கட்டிவிடுவதிலும் குரூரமான ஒரு மனதிருப் தியை பெற்று வந்தார்கள்.

இப்போது கொஞ்சநாட்களாக அவர்கள் அசைபோடுவ: தற்குப் புதிய தீவனம் கிடைத்திருந்தது.

வேப்பமரத்து வீட்டு மயிலுப்பிள்ளே ஏன் இந்த ஊரை விட்டு சொல்லாமப் பொரையாம ஒடிப்போர்ை? ஏன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/120&oldid=589364" இலிருந்து மீள்விக்கப்பட்டது