பக்கம்:நினைவுச்சரம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£42 நினைவுச்

சுகமாக ஜிலுஜிலுக்கும். டி. பி. நோய்காரர்களுக்கு அது இதம் தரும் என்று சொல்லிக் கொள்வார்கள்.

திருநெல்வேலி வட்டாரத்துக்கு முதல் முதலாக வந்த ஆகாய விமானம் ஹைகிரவுண்டில்தான் இறங்கி நின்றது. எல்லோரும் வந்து பார்க்கட்டும் என்று பத்து நாட்கள் அது அங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பழங்கால மாடல்; பெரிய ஏரோப்ளேன். அவ்வப்போது தரையிலிருந்து கிளம்பி மேலே பறந்து வட்டமிட்டு, நேரே மேற்கே போகும். பிறகு திரும்பிவரும். பேட்டைவரை போய் திரும்புவதாகச் சொன்னர்கள். அப்படி மேலே ஏறுவதும் இறங்குவதும் பார்ப் பதற்குப் பெரும் வேடிக்கை ஆயிற்று. சுற்றுவட்டாரத்தி லுள்ள சகல ஊர்களிலிருந்தும்-முப்பத்தைஞ்சு நாற்பது மைல்களுக்கு உட்பட்ட பெரிய ஊர்கள், பட்டிதொட்டிகளில் இருந்தெல்லாம்-ஜனங்கள் ஆகாசக் கப்பலே பார்ப்பதற். கென்றே ஹைகிரவுண்டுக்கு வந்து போனர்கள். எப்ப பார்த் தாலும் திருவிழாக் கூட்டம்தான். சாமி நெல்லேயப்பர் தேரோட்டத்தின் முதல் நாளுக்குக் கூடுகிற கூட்டத்தைவிட அதிகமான கூட்டமே தினசரி கூடிக்கொண்டிருந்தது, மானத்திலே பறக்கிற கப்பல்ே கிட்ட நின்று நல்லாப் பார்க் கலாமே. அது கிளம்பி மேலே போறதையும், இறங்கி ஓடி நிற்பதையும் பார்க்கலாமே என்ற ஆசை ஆண்களேயும் பெண்களேயும், சகல வயசு, சகல தரத்து மக்களையும், ஹைகிரவுண்டுக்கு இழுத்துவந்தது. அந்த மேட்டுநிலம் அதனுடைய வரலாற்றிலேயே அப்போதுதான் அவ்வளவு ஜனங்களே கண்டிருந்தது.

ஏரோப்ளேன் பக்கத்தில் போகமுடியாது. எட்ட, வேலி கட்டியிருந்தது. அங்கே சுற்றி நின்றுதான் பார்க்கவேண்டும். நன்ருகவே பார்க்கமுடிந்தது. ஒரு ரூபாய் கொடுத்தால், பக்கத்தில் போய் அதை சுற்றிவந்து தொட்டுத்தடவி பார்க் கலாம். கதவைத் திறந்து உள்பகுதியையும் காட்டுவார்கள். ஐந்து ரூபாய் கொடுத்தால் உள்ளே ஏறி உட்கார்ந்து, பறக்க லாம். பேட்டைவரை போய் வந்து இறங்கலாம். அப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/142&oldid=589386" இலிருந்து மீள்விக்கப்பட்டது