பக்கம்:நினைவுச்சரம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 143

ஐந்து ரூபாய் கொடுத்து ஏகப்பட்ட பேர் பறக்கும் அனுபவம் பெற்ருர்கள்.

சிவபுரத்தை சேர்ந்த அக்காள் ஒருத்தி-அப்போது அவளுக்கு இருபத்துமூன்று இருபத்துநான்கு வயசிருக்கலாம் -கல்யாணத்துக்கு எடுத்திருந்த, ஜரிகை நிறைய நெய்த, * முகூர்த்தப் பட்டை கட்டிக்கொண்டு, இருந்த நகைகளை எல்லாம் அணிந்துகொண்டு, பெருமையாக ஏரோப்ளேன் பார்க்கப்போய், ஐந்து ரூபாய் கொடுத்து அதில் ஏறிப் பறந்து பார்த்துவிட்டு, சிறு பெண்ணின் குதூகலத்தோடு நான் ஏரோப்பிளேன் சவாரி போய்வந்தேனே நான் ஏரோப் ளேனிலே பறந்திட்டு வந்தேனே என்று ஜம்பமாக ஒலிபரப் புவதை ரொம்பநாள் அனுஷ்டித்து வந்தாள். இதுவும் மயிலேறும் பெருமாளுக்கு நன்ருக ஞாபகமிருந்தது.

'இப்போது ஹைகிரவுண்டே அடையாளம் தெரியாதபடி மாறிப்போச்சே !’ என்று அங்கலாய்த்தார் பெரியபிள்ளே.

காலனிப் பகுதிகளும் கட்டிடங்களுமாய்-ஆஸ்பத்திரி, வைத்தியக் கல்லூரி, வீடுகள், காலேஜ், கட்டிடங்கள்... கட்டிடங்கள் ! சாதிக்காப் பலகைப் பெட்டிகள் போன்ற, அழகோ எடுப்போ இல்லாத, நாகரிகக் கட்டிடங்கள் ! கண் போன இடமெல்லாம் செம்மண் விரிநிலமாய், பொட்டல் காடாய், காட்சிதந்த மேட்டுநிலம் இப்போது காங்கிரீட் கட்டிடக்காடு ஆகி, நகரத்தின் ஒரு எக்ஸ்டன்ஷன் ஆக வளர்ந்து, கும்பலும் பஸ் போக்குவரத்தும் பெற்ற பிரதேச மாக மாறிநின்றது.

என்னமா மாறிப்போச்சு 1 என்னமா மாறிப்போச்சு!’ என்று பெரியபிள்ளே, அதிசயிக்கிருரா அல்லது அந்த மாறு தலுக்காக வருத்தப்படுகிருரா என்று புரியாத விதத்தில், திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

பட்டணங்கள் இப்படித்தான் அண்ணுச்சி அசுர வேகத் திலே வளர்ந்துக்கிட்டே போகுது, கிராமங்கள் அழுதுவழிஞ்ச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/143&oldid=589387" இலிருந்து மீள்விக்கப்பட்டது