பக்கம்:நினைவுச்சரம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#52 நினைவுத்

நேரத்திலே எதிர்பார்க்காத இடத்திலே வந்து நின்னுக்கிட்டு, நான் சம்பகமில்லா! என்ன தெரியலியா உங்களுக்கு??ன்னு கேட்டா, மனுசன் திகைச்சுப்போயி நிக்காம என்ன செய்ய முடியும்? என்று பெரியபிள்ளை கேட்டார்.

அது சரிதான் அண்ணுச்சி. அவ உங்களே மறக்கலே. அதுமட்டுமில்லே. உங்களேப்பத்தி விசாரிச்சுக்கிட்டே இருந் திருந்திருக்காயின்னும் தெரியுது. இந்தக் காலத்திலே இவ்வளவு விசுவாசமா இருக்கிறவங்க அபூர்வம் அண்ணுச்சி!' என்று பாவன்னு தன் மனசில் பட்டதைச் சொன்னுர்.

உம்-ஊம் என்று தான் மறுமொழி கொடுத்தார் பெரி யவர். அம்மை உயிரோடு இருந்தவரை இவளோட தாயாரு பொன்னம்மாதான் எங்க வீட்டிலே வேலை செய்துக் கிட்டிருந்தா. இந்தப் புள்ளெயை-அப்ப செம்பகம் சின்னப் புள்ளதானே-அம்மா பிரியமா கவனிச்சுக்கிடுவா. வீட்டிலே என்ன செஞ்சாலும் அதுக்கும் ஒரு பங்கு உண்டு. அது எங்க வீட்டுச் சோற்றை உண்டுதான் வளர்ந்துதுன்னு வையுமேன். அம்மை செத்தபிறகும் பொன்னம்மாதான் வீட்டுக்காரியங்கள் அனைத்தையும் கவனிச்சுக்கிட்டா. செம்பகம் புள்ளெயும் கூடமாட வேலைகள் செய்யும். பொன்னம்மாளுக்கு ஏலாத, நாள்களிலே அதுவே சகல வேலேகளேயும் செய்துமுடிக்கும். பதிமூனரை-பதிலுை வயசுவரை அது பெரியமனுவி ஆதலே...இப்போல்லா பன்னெண்டு வயசிலேயே, இம்புட்டுப் போலே இருக்கையிலேயே, பொட்டைப் புள்ளேக சமைஞ்சு சடங்கு கழிக்கிற அந்தஸ்தை அடைஞ்சிருதுக. அவசர காலத்துக்கு ஏத்தபடி எல்லாம் அவசரம்தான் ! ஆன உயரத் திலேயே உருவத்திலேயோ அந்நாளேய வளர்த்தி இந்: நாாேய புள்ளெகளுக்கு இல்லே...செம்பகம் பதிமூணுவது வய சிலே பெற்றிருந்த வளர்த்தியை அவ மக மயிலு பதினெட். டாவது வயசிலே பெற்றிருக்கலே. செம்பகம் மினுமினு தள தளன்னு நல்ல குதிரைக்குட்டி மாதிரி இருந்தா. பருவம் அடைஞ்சு அதுக்கேற்ற உடல் பொலிவையும் பெற்று வளர்ந்: திருக்கக்கூடிய சமயத்திலே அவள் ரொம்ப ஜோரர்கத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/152&oldid=589397" இலிருந்து மீள்விக்கப்பட்டது