பக்கம்:நினைவுச்சரம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 58 நினைவுச்

வரும். அரை மண்டபம், முக்கால் மண்டபம்வரை தண்ணிர் பெருகி வருவது சாதாரணம்.

மண்டபத்தைச் சுற்றிலும் தண்ணிர் பரந்து ஓட ஆரம்பித் தாலே, ஆற்றில் இறங்கி மறுகரைக்குச் செல்ல விரும்புகிற ஆட்கள் இறங்க பயப்படுவார்கள். இழுப்பும் ஆழமும் அதிக மாக இருக்கும். தோள்வரை தண்ணிர் போகிறபோதுகூட, துணிந்து இறங்கி தென்கரையிலிருந்து வடகரைக்கும், வட கரையிலிருந்து தென்கரைக்கும் போகிற-வருகிற தைரியசாலி களும் உண்டு. அப்படித் துணிந்து இறங்கியவர்களில் ஒரு சிலர் ஆற்றேடு போய்விட்டதும் உண்டு.

எதுக்கும் உடல் தைரியத்தைவிட மன தைரியம்தான் அதிகம் வேணும். தென்கரை மீதுள்ள சிவன் கோயிலுக்கு முன்பு சிவபுரம் பஞ்சாங்கய்யர் தினம்போய் பூஜை செய்து கொண்டிருந்தார். ஒல்லியாய், பார்க்க நோஞ்சான் மாதிரித் தான் இருப்பார். ஆலுைம் மன தைரியம் ஜாஸ்தி. பெரிய வெள்ளமானலும் பயப்படமாட்டார். வாழை அடிமரத்தை மிதக்கவிட்டு, அதைக் கட்டிப்புடிச்சபடியே ஆற்றைக்கடந்து போய்விடுவார். மேற்கே தள்ளிப்போய் ஆற்றிலே இறங்கி, நீரோட்டத்துக்குத் தக்கபடி லாகவமா நீச்சலடித்து கிழக்கே, இந்த வெள்ளிமலைக்குக் கீழ் பக்கமாப் போய் ஏறிவிடுவார், திரும்பும்போதும் அப்படி வசமாப்பாத்து இறங்கி, கிழக்கே தோப்புக்கிட்டே போய் ஏறிவிடுவார். மனசிலே தைரியம் இருந்தால்தான் அதெல்லாம் சாத்தியம்.

ஐம்பது ஐம்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னலே 'பக்கிள்பிள்ளை’ என்று ஒருத்தர் இருந்தார். அவருக்கு ஏன் அந்தப் பெயர் ஏற்பட்டதுன்னு தெரியலே. பக்கிள்பிள்ளே வாலிப காலத்திலே சிவபுரம் ஊரோடுதான் இருந்தார். பெரிய சூரன்னுதான் சொல்லணும். இந்த ஆற்றிலே மண்டபம் தட்டட்டி மட்டும் தெரிகிற அளவுக்கு வெள்ளம் போகையிலே அவரு பந்தயம் கூறுவாரு அந்தத் தட்டட்டி மேலே ஏறி நின்று பல்டி அடிச்சுக் காட்டுதேன் பாரு என்று. மன்னன் அப்படியே செய்தும் காட்டுவாரு. ஒரு பர்லாங் மேற்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/158&oldid=589405" இலிருந்து மீள்விக்கப்பட்டது