பக்கம்:நினைவுச்சரம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 நி:ைவுத்

சட்டை அணிகிற பெரியவர்கள், சட்டைக்கு மேலே ஒரு துண்டு போட்டுக்கொள்வதுதான் வழக்கம், அதுதான் கெளரவம்.

விசேஷ வீடுகளுக்கு, வெளியூருக்குப் போகிறபோது சட்டை மேலே நேரியல் அல்லது விசிறி மடிப்பு லேஞ்சி போடுவது ஒரு பெருமையாகக் கருதப்பட்டு வந்தது. -

இப்போது என்ன ஆச்சு? உள்ளுர் விசேஷ வீட்டுக்குக் கூட எல்லோரும் சட்டைதான் போடுகிருர்கள். சட்டை மட்டுமே போடுகிருர்கள். மேலே துண்டு, நேரியல், விசிறி மடிப்பு, பட்டுைேஞ்சி என்று எதுவுமே கிடையாது.

பால் வண்ணம் பிள்ளேகூட-சதா பட்டுலேஞ்சி அணிந்து திரிந்ததன்மூலம் அதையே ஒரு பட்டப்பெயராக ஏற்றுக் கொண்டுவிட்ட உல்லாசிகூட-இப்போது சட்டை அணிந்து கொண்டால் மேலே லேஞ்சி போடுவதில்லே. சலவை செய்த துண்டுகூடப் போடுவது கிடையாது. (என்ருலும் அவ ருடைய பட்டு லேஞ்சி என்ற பெயர் என்னவோ இன்னும் மறையவில்லே. -

சட்டையில்கூட, முன்பு பெரிய மனிதர்கள் தொள தொள என்று பெரிதாய், கீழே முழங்காஃத் தொடும் அள வுக்கு நீண்டு தொங்கும் (முழுக்கை அல்லது அரைக்கை) சட்டை தைத்துக் கொள்வதே கெளரவம் என்றே கருதி சூர்கள். .

இப்போது பெரிய மனிதர்கள்-வயசிலும் உருவத்திலும் எவ்வளவு பெரியவர்களாக இருந்தபோதிலும்- தலேவழி யாகப் போட்டுக் கழற்றுகிற சட்டைகளே விரும்பாது

溶 * - ", - o: r - - .يو همي * ίς. , ko o - ಹತ್ತ್ತT சுலபமாகப் புகுததககூடிய, அப்பககம திறந்து கிடக்கிற, குட்டைச் சட்டைகளே-இடுப்புவரை நின்று விடுகிற 'ஸ்லாக் ஷர்ட்'டுகளே அணிவதையே கெளரவம் என்று மதித்து நடக்கிருர்கள்.

வெள்ளேத்துணியில் சட்டைகள் தைத்துக் கொள்வதே கெளரவம், பெரிய மனுஷத்தனம் என்று கருதியவர்கள் கூட,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/174&oldid=589427" இலிருந்து மீள்விக்கப்பட்டது