பக்கம்:நினைவுச்சரம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் - 173

துண்டு என்கிற-டர்க்கி டவல்’ என்று அவர்கள் பெருமை யாகச் சொல்லிக் கொள்கிற-ஒரு ரகத்துண்டை தோளில் *வல்லாட்டு ஆகப் போட்டுக்கொண்டு, நெஞ்சை நிமிர்த்தி "ஜம்பம் ஜான்கள்: ஆகத் திரிவது வழக்கம். அவர்களைப் பார்க்கும்போது மயிலேறுவின் மனம் குமையும்; நமக்கு டர்க்கி டவல் வாங்க வழி இல்லையே என்று ஏங்கும்.

மதுரைக்கு வந்ததும் மயிலேறு தேங்காப்பூத் துண்டு வாங்கி, தோளில் போட்டுக்கொண்டு ஜம்பமாகத் திரிந்தான். மெதுமெதுவாக இந்தப் பழக்கம் மறைந்து போய்விட்டது. காலம் தன் போக்கில் எத்தகைய மாறுதல்களைச் செய்து கொண்டே போகிறது !

முன்பெல்லாம் ஆண்பிள்ளைகள்கூட தலைமுடியை நீளமாக வளரவிட்டுக் கொள்வது இயல்பாக இருந்தது. பையன்கள் சடைப்பின்னி தொங்கவிட்டு பூமுடித்து அலேவதும் சகஜமான காட்சி.

பையன்களும் கைகளில் தங்கக்காப்பு அணிவது கேலிக் குரியதாக இருந்ததில்லே. காதுகுத்தி, சிவப்புக்கல் அல்லது வெள்ளேக்கல் குச்சி, அல்லது முக்கட்டு கிளாவர் கடுக்கன் போட்டுக்கொள்வது பெருமைக்கும் அந்தஸ்துக்கும் உரிய தாக இருந்தது. -

மயிலேறு பதிமூனு வயசுமுடிய தலேமுடி வளர்த்துக் கொண்டிருந்தான். காதுகளில் கடுக்கன் பதினுறு வயதுவரை கிடந்தது. பதினுலு வயசுவரை கைகளில் காப்புகள் அணிந்து கொண்டிருந்தான்.

இப்போது சிவபுரத்திலே இதெல்லாம் அநாகரிக விஷ யங்கள் ஆகிவிட்டன. சின்னஞ்சிறு வட சிலேயே ஆம்பிகளப் புள்ளே’களுக்கு கிராப் வைத்துவிடுவதும், மாதத்துக்கு ஒரு தடவை அதை வெட்டிவிடுவதும் நடைமுறையாகி உள்ளது. அந்நாட்களில், பெரியவர்கள் அநேகமாக சட்டை போடுவது கிடையாது. விசேஷ வீடுகளுக்குக்கூட நேரியல் அல்லது வெண்பட்டு போட்டபடி போய் வந்துவிடுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/173&oldid=589425" இலிருந்து மீள்விக்கப்பட்டது