பக்கம்:நினைவுச்சரம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 19 |

எண்ணிப் பார்ப்பது-ஒரு முக்கிய அலுவலாகவே இருந்தது சிவபுரத்தில்.

பெரிய மனுவி ஆகி வீட்டுக்குள் அடைபட்டு விட்ட” குமரிகளுக்கும் இப்படி கணக்கெடுப்பதும் ஊர் விவகாரங்களே அலசுவதும் பிரதானமான அலுவலாகத்தான் இருந்தது.

' கடல் குமரி கரை ஏறினாலும் நடைக் குமரி கரை ஏற மாட்டாள் ; இடை நடையிலே உட்காராதேட்டி : என்று ஆச்சியும் அத்தையும், அம்மையும் பெரியம்மையும் அதட்டி யும் இடித்தும், அன்பாகவும் கண்டித்தும், சமயம் நேரும் போதெல்லாம் எடுத்துச் சொல்லி வந்தாலும், குமரிப் பொண்ணுக என்னவோ எப்பவும் இடைநடையில் உட்கார்ந்து வம்பு பேசுவதிலும், வம்புகளே செவி மடுப்பதிலும் அதிக ஈடுபாடு உடையவர்களாகத்தான் இருக்கிருர்கள். தெற்குக் கடலோரத்தில் நின்று நித்தம் தவம் செய்யும் ” குமரி தான் கரை ஏறின பாடாயில்லே நடைக்குமரி”கள் கரையேறிக் கல்யாண பந்தத்தின் மூலம் சம்சார சாகரத்தில் குதித்து உருப்பட்டும் உருப்படாமலும், பலரை உருப்பட விடாமலும் செய்து, திருப்தியோ அதிருப்தியோ அடைந்து கொண்டுதான் இருக்கிருர்கள்.

குமரியாக சிவபுரத்தில் வசித்து, இந்தப் பழக்க வழக்கங் களே எல்லாம் குறைவறக் கற்றுத் தேர்ந்த அழகம்மை; கல்யாணமாகி சண்பகராம நல்லூர் போய் அழகம்மை அம்மா ளாகிப் பெரியதனம் பெற்ற பின்னரும், தன் தொழிலே ஒழுங்காகச் செய்து வந்தாள். ஒரு வியாழவட்டம் புருஷைேடு வாழ்ந்த பிறகு, காசநோய் வந்து அவர் ஆசாரிப்பள்ளம்’ ஆஸ்பத்திரியில் ஒரு வருஷம் கிடந்து உயிரை விட்டபிறகு, அவள் நிலம்-கரை-வீடு வாசல் எல்லாம் நிறையவே இருந்த தால் செம்பராநல்லூ ரிலேயே தங்கி விட்டாள். அவளுக்குக் குழந்தை குட்டி எதுவும் இல்லே.

அழகம்மை அம்மாள் கால ஓட்டத்தில் அழகம்மை ஆச்சி என்ற கெளரவத்தைப் பெற்றுவிட்ட போதிலும் அவளுடைய சின்னப்புத்தி அவளை விட்டுப் போகாமலேதான் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/191&oldid=589449" இலிருந்து மீள்விக்கப்பட்டது