பக்கம்:நினைவுச்சரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ū நினைவுச்

மாப் பேசுறது, ஜாடை மாடையாய்ப் பேசுறது, அங்கே குத்தி இங்கே வாங்குற மாதிரிப்பேசுறது, கண்டு ஒண்னும் காளுதபோது ஒண்ணுமாப் பேசுறது, இப்படி இல்லையா க சுபாவம், அதுகளே காட்டியிருக்கிருங்க.

இந்த வெள்ளுரா மாப்பிள்ளே செத்துப் போன, கிடத்தி அழுறதுக்கும், அவ தாலி அறுத்துக் கிடக்கிறதுக்கும் விடுன்னு ஒண்னு இருக்குதா அவளுக்கு? இல்லே, அவளே செத்துக் கிடந்தாலும், அவளே கிடத்தி அழவும் எழவு கொண் டாடவும் சொந்த வீடு இருக்குதா?-அப்டீன்னு அத்தைகளும் பெரியம்மைமாருகளும் பேசியிருக்காங்க. வெள்ளுரா, நாதி பத்தவ, வீடத்தவன்னுல்லாம் இழிவாப் பேசியிருக்காங்க.

எங்க அம்மா பிறந்து வளர்ந்தது வெள்ளுரு.

தம்பியா பிள்ளே, இங்கே ஒரு முக்கியமான பாயின்ட். நம்ம ஜில்லாவிலே மட்டும் தான் இப்படி ஒரு வழக்கம் இருக் கிறதா எனக்குப்படுது. ஒவ்வொரு ஊரிலும் கல்யாணமாகி வாழ வருகிற பொம்பிளேகளே மற்றப் பொம்பிளேகள் அவளவள் அப்பா அம்மா ஊரை வச்சுத்தான்-அதாவது அவள் எங்கிருந்து வந்

து வந்தாளோ அந்த ஊர்ப் பேராலேதான் - சுட்டிச் சுட்டிப் பேசுருங்க. வெள்ளூரிலிருந்து வந்தவ வெள் ஞரா, கார்சேரியிலே பிறந்து வளர்ந்தவ கார்ச்ேரியா, பெருங் குளத்திலே யிருந்து பெண் எடுக்கப்பட்டு இங்கே வந்திருப்பவ பெருங்குளத்தா; இப்படி காடு வெட்டியா, ஏரலா, செவந்தி பட்டியா, திருநெவேலியா, பாளேயங்கோட்டையா, சிந்து பூந்துறையான்னு ஊர்கள் பேராலே தான் அறியப்படுருங்க; பேசப்படுருக. இந்த ஊரிலேயே வசித்து, பிள்ளைகள் பெத்து, பேரன் பேத்தி எடுத்துவிட்ட பிறகும்கூட அவளுக வெள்ளுரா, ஏரலா, குறும்பூரா, மூளிக்கருப்பட்டியா,முக்காணி யாளுளாகவே தான் கருதப்படுவாளுகளே தவிர, சிவபுரத் தாள் ஆகிவிட்டாள் என்று மதிக்கப்படுகிறதேயில்லே. இது ஒரு வேடிக்கையாகத்தான் எனக்கு இப்பவும் படுது. இவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/20&oldid=589262" இலிருந்து மீள்விக்கப்பட்டது