பக்கம்:நினைவுச்சரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«ហ្សៃ iş

வைப்பாங்க. அல்லது விலக்கு வாற வீட்டை வாங்கிடுவாங்க ஒவ்வொரு மகன் பிறக்கப் பிறக்க, ஒவ்வொரு வீடாக அல்லது மனயாக கூடிக்கிட்டே போகும். சொத்தை பங்கு வைக்கிற போது, ஒவ்வொரு மகனுக்கும் தனித்தனி வீடு, அல்லது வீடு கட்டுவதற்கு வேண்டிய மனேயும் கொஞ்சம் பணமும் கிடைத்துவிடும். நம்ம பெரியவங்க தங்களைப் பற்றி மட்டுமே கவலேப் பட்டுக்கிட்டு இருக்கலே. நாம நல்லா இருந்தாப் போதும், இருக்கிற வரைக்கும் போடு-போடுன்னு போடு வோம்; வாறவங்க அவங்க பாட்டை பார்த்துக்கிடட்டு மேன்னு வாழலே. நாமும் நல்லாயிருக்கனும், நம்ம பிள்ளை குட்டிகளும் நம்ம பெயரை சொல்லிக்கிட்டு ரொம்ப நல்ல. படியா வாழனும்னு ஆசைப்பட்டாங்க. அதேைல அவங்க செயம் செயமின்னு வாழவும் முடிஞ்சுது.

ஆமா. நான் இந்த வீட்டைப் பத்தியில்லா சொல்ல. வந்தேன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணமான புதுசிலே சொந்த வீடு இல்லேயேங்கிறது ஒரு குறையாத் தோணலே. அதேைல வீடு கட்டுறதைப் பத்தி அவங்க யோசிக்கவேயில்லே. ஆனல் மத்தவங்க அதை ஒரு குறையா நினேச்சு இழப்பமாப் பேச ஆரம்பிச்சிட்டாங்க. பெரியப்பாமசர் களுக்கு பூர்வீக வீடு கிடைச்சிருந்தது. சித்தப்பா சொந்த வீடு கட்டிக்கிட்டாரு. எங்க அப்பா, சொந்த வீடுன்ன என்ன, வாடகை வீடுன்ன என்ன; எல்லாம் ஒரு எழவு வீடு தான்;. நாம சாகிறப்போ வீட்டை தலையிலேயா தூக்கிட்டுப் போகப் போருேம்னு எடுத்தெறிஞ்சு பேசுவது வழக்கம். கல்யாண மாகிப் பல வருஷங்கள் ஆகியும் பிள்ளேயே பிறக்கலே. அதுனுலே வேறே ஒரு அசிரத்தை; ஒரு அலட்சியம். இருக்கிற வரைக்கும் நல்லா உண்டு உடுத்தி வாழவேண்டியது; நமக்குப் பிறகு யாருக்காகன்னு வீடு கட்டி வைக்கனும் கிற ஒரு நெனேப்பு.

அம்மாவும் அதே மனே பாவத்திலே தான் இருந்திருக்கா.

ஆணு, பொம்பிளேக அப்படி இருக்க விடலே. அத்தைமாரு களும் பெரியம்மைகளும் சின்னம்மையும் அம்மான்வ கேவல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/19&oldid=589260" இலிருந்து மீள்விக்கப்பட்டது