பக்கம்:நினைவுச்சரம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 நினைவுச்

லிருந்து வீடு சேர்ந்தவுடன் தின்பதற்கு பண்டம் ஏதாவது இருக்கணும். மிக்ஸ்சர், காராசேவு, பிஸ்கட் தினுசுகள் வாங்கி ஸ்டாக் பண்ணிக்கொள்ளணும். நினைக்கிறபோது கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வாயிலே போட்டுக்கலாம். ஒருநாள் திரட் டுப்பால் செய்து பார்க்கணும். திரட்டுப்பால் தின்னு ரொம்ப நாளாச்சு...

2C

அன்று இரவு மயிலேறும் பெருமாள்பிள்ளைக்கு சரியான உறக்கம் இல்லே. மனம் காரணம் இல்லாமலே சஞ்சலமுற்றது. இனம் புரியாத ஒரு கனம்-சோகச்சுமை-உள்ளத்தை அழுத்தியது.

இரவு இரண்டு மணிக்கு அவர் விழித்துக்கொண்டார். பொதுவாகவே, அவருக்கு துளக்கம் அதிகம் கிடையாது. எட்டரை அல்லது ஒன்பது மணிக்குப் படுத்தால், நான்கு மணிநேரம் ரொம்ப அசந்து துரங்குவார். நல்ல தூக்கம். எங்கே என்ன நடந்தாலும், வெளியே தெருக்களில் எவ்வளவு கூச்சல்கள் கலாட்டாக்கள் நிகழ்ந்தாலும் அவருக்குத் தெரியா மலே போய்விடும். எதுவும் அவர் துயிலே கலைத்துவிட முடியாது. பிறகு, சடாரென்று, யாரோ தட்டி எழுப்பியது போல விழிப்பு வந்துவிடும். அப்புறம் உருண்டு புரண்டு கொண்டிருக்க வேண்டியதுதான். தூக்கமும் விழிப்புமாக, தூக்கம் என்றும் சொல்லமுடியாத-விழிப்பு என்றும் கொள்ள முடியாத கிறக்க நிலையாக, பல ரகமான கனவுகளும் குழம்பிக் கலக்கும் ஒரு அவஸ்தையாக, இரண்டிலிருந்து நான்கு மணி வரை பொழுது கழியும். நாலரை மணிவரை எதையாவது எண்ணியவாறு கண்களே மூடிக்கொண்டு கிடப்பார். அப்புறம் எழுந்துவிடுவார். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/202&oldid=589461" இலிருந்து மீள்விக்கப்பட்டது