பக்கம்:நினைவுச்சரம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 - நினைவுத்

சத்தம் எழுகிறது. அப்புறம் வைகாசி கடைசியிலே அல்லது ஆனியிலிருந்து கேட்காமலே போயிருது. ஆத்தங்கரையிலே அதிகாலேயிலே அக்காக்குருவி கத்துதே அதுவும் மாசிக் குப்பிறகு, கோடை வருகிற சமயத்திலேதானே வருது : மற்றக் காலத்திலே எங்கேயோ போயிருது; அல்லது, இந்தப் பக்கத்திலேயே திரிஞ்சுக்கிட்டிருந்தாலும் ஏக்கத் தோடு அக்கோ-அக்கோன்னு கத்துறது இல்லே. அதே மாதிரி இந்தக் கருங்குருவியும் இளவேனில் பருவத்திலே இங்கே தென்படுது ; பிறகு இல்லாமப் போயிருதுன்னு பால் வண்ணம் சொன்னன். அவன் வருஷக்கணக்கிலே கவனிச்சுப் பார்த்தாளும். சும்மா சொல்லமாட்டான். முன்னலே நான் இங்கே இருந்தபோது இந்த விஷயத்தைக் கவனிக்கலே, இந்தக் குருவி எல்லாக் காலத்திலேயும் கத்திக்கிட்டு இருக் கும்னுதான் நெனச்சேன். இனிமே கவனிக்கணும்.

அடுப்பில் காப்பி கொதிக்கிற நேரத்தில் பெரியபிள்ளே பறவைகளைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தார்.

வால் மிக நீண்டு தொங்க, அப்படியும் இப்படியும் அழகாகப் பறக்கும் ஒருவகைக் குருவி-கறுப்பு, வெள்ளே, கருமை ஒடிய வெண்மை, சிவப்பு நிறத்தில் எல்லாம் விதம் விதமாக-ஊருக்குள் காணப்பட்டது. காலப்போக்கில் காணு மலே போய்விட்டது.

பனைமரங்களின் ஒலேயில் தொங்கும், நுட்பமான வேலைப் பாடு கொண்ட கூடுகளே பின்னி வசிக்கும் தூக்களுங்குருவி கள்...அவையும் இல்லாமலே போயின.

கறுப்பும் வெள்ளேயும் கலந்த ஒரு தனி நிறச் சிறு பறவை யாய், சிறு கொண்டை தலையில் பெற்று, முகத்தில் கண் களேச் சுற்றி கன்னங்கரேல் என்றும், கழுத்தில் வெளேர் என்றும், வாலடியில் செவேல் என்றும் பலிச்சிடும் வர்ணங்கள் பெற்றும், வசீகரமாக விளங்கித்திரிந்த ஒரு இனக் குருவியை யும் காணவில்லே. -

எண்ணிப்பார்த்தால், மறைந்துபோனவை இப்படி பல இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/206&oldid=589465" இலிருந்து மீள்விக்கப்பட்டது