பக்கம்:நினைவுச்சரம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 蒙23

ಖTುಹ6rr என்கிறமாதிரி ஆயிட்டுது. ஆச்சி போட்ட தூபத்தக்கு, இவ வந்ததும் போனதும் குழை அடிச்சு கிளறி விட்டதுபோல ஆயிடுச்சு என்று முடித்தார்.

பெரியபிள்ளை இதை எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு நடந்திருக்கா !” என்றது அவர் மனம், என்ன பேசுவது என்றே தோன்றவில்லே அவருக்கு. கல்லுப்பிள்ளையார்மாதிரி உட்கார்ந்திருந்தார். - அவர் ஏதாவது பேசுவாரோ என்று பிறவியாபிள்ளே காத் திருந்து பார்த்தார். அப்படி அவர் முன் காத்திருப்பதே பெரிய சங்கடமாகவும் இருந்தது. நேரம் கனத்து, சுமை யாக அழுத்துவது போலிருந்தது. -

அண்ணுச்சி தனியாயிருந்து யோசிக்கட்டும்’ என்று நினைத்து பிறவியாபிள்ளை மெதுவாக எழுந்தார். அங்கு மிங்கும் பார்த்தபடி நின்ருர். வாசல் திண்ணையில் வந்து சிறிதுநேரம் நின்று தெருவைப் பார்த்தார். பிறகு படி இறங்கி, குனிந்த தலையோடு தன் வீடுநோக்கி நடந்தார்.

பெரியபிள்ளைக்கு மற்றவரின் செயல்கள் பிரக்ஞையில் பதியவேயில்லே. குறுகுறு என்று ஒரு வேதனை பூச்சிமாதிரி உள்ளில் அரிக்க, ச்ே, இதை நான் எதிர்பார்க்கவே இல் லேயே..சே, சே என்று மனசில் புழுங்கியவாறு உட்கார்ந் திருந்தார்.

நேரம் ஊர்ந்தது. அந்த விட்டின் மவுனமே அவரை அழுத்தியது.

-இதல்ைதான் ரெண்டு நாளா ஒருத் தனும் இங்கே எட்டிப் பார்க்கலேங்கிறது. இப்போல்லா புரியுது : பால் வண்ணம் தினம் மத்தியானத்துக்கு மேலே கட்டையை கீழே போட வருவானே, காணுேமேன்னு நெனச்சேனே. சுகவாசி அடிக்கடி வருவானே, அவன்கூட எட்டிப் பார்க்கலியேன்னு யோசிச்சேன். இவ்வளவு நடந்திருக்கா ! இப்போ பிறவி தயங்கித் தயங்கி இதை என்கிட்டே சொல்லலேன்ன எனக்கு ஒண்ணுமே தெரிஞ்சிருக்காது. ஒவ்வொருத்தனும் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/223&oldid=589482" இலிருந்து மீள்விக்கப்பட்டது