பக்கம்:நினைவுச்சரம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 227

24

திங்கள் கிழமை. வடக்கேயிருந்து வரும் எக்ஸ்பிரஸை எதிர்பார்த்து, திருநெல்வேலி ஜங்ஷன் பிளாட்பாரத்தில் காத்து நின்றவர்களில் மன. பென. வும் ஒருவர். மதுரையிலி ருந்து வரும் சுந்தரம் என்பவனே வரவேற்க அவர் தயாராக நின்ருர்,

அவருடைய வேல்முருக விலாசம் வெள்ளி பாத்திரக் கடைசியில் கணக்கெழுதும் சிப்பந்தி. அவனுக்கு முப்பது வயசுக்கு மேலாகியிருந்தது. நல்ல பையன்?. இன்னும் கல்யாணமாக வில்லே. அவன் மன. பென. வுக்கு அவரு டைய இறந்த காலத்தை நினைவுபடுத்தும் ஒரு சின்னமாகவே இருந்தான். அவனுக்கு வாழ்க்கையில் ஒரு பற்றுதலும் பிடிப்பும் உண்டாக்க, உரிய சமயத்தில், தன்னல் இயன்ற உதவிகளே செய்ய வேண்டும் என்று மனு, பெளு. ரொம்ப காலமாகவே எண்ணிக் கொண்டிருந்தார்.

செண்பகம் தன் மகள் மயிலுக்கு வாழ்க்கை அமைத்து விட வேண்டும் என்று பெரியபிள்ளேயின் உதவியை நாடிய போது, மயிலுக்கு மட்டுமல்லாது சுந்தரத்துக்கும் நல்வாழ் வுக்கு வழி செய்து விட முடியும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் பளிச்சிட்டது. அதனுல்தான் திங்கள் மத்தி யானம் தன்னே எதிர்பார்த்து விருந்துச் சாப்பாட்டுடன் இருக்கும்படி செண்பகத்திடம் அவர் சொன்னர்.

பதினுேரு மணிக்கு திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்’ வந்து சேர்ந்தது. அதில் சுந்தரமும் வந்து இறங்கின்ை. அவர் கேட்டு எழுதியதற்கிணங்க மகன் கொடுத்து அனுப்பி, யிருந்த பணத்தை அவன் அவரிடம் தந்தான்.

ஸ்டேஷனே விட்டு வெளியே வந்ததும், பெரிய பிள்ளே அவைேடு ஒரு ஒட்டலுக்குப் போளுர். காப்பிக்கு ஆர்டர் கொடுத்து விட்டுக் காத்திருந்த போதும், காப்பி குடிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/227&oldid=589486" இலிருந்து மீள்விக்கப்பட்டது