பக்கம்:நினைவுச்சரம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாம் 233

கனவுகள், செயல்களின் சாயல்களும் கூட. கண்ணுக்குப் புலகைாத அந்த சக்திகளினூடே நான் திம்மதியாக, சந்தோஷமாக, மன நிறைவோடு நாளோட்ட முடிகிறது.

அம்மை ஆசைப்பட்டபடி இந்த வீட்டில் ஒரு கல்யா ணமும் நிறைவேறினால், அம்மையின் ஆத்மா சாந்தி அடையும். இந்த வீட்டின் ஆத்ம சக்தியின் ஜீவ ஒளியும் அதிகரிக்கும்.

மயிலேறும் பெருமாள்பிள்ளே இவ்வாறெல்லாம் எண்ணிப் பொழுது போக்கினர்.

  • ஒரு வாரத்தில் கல்யாணம் நடைபெறும். ரொம்பப் பெருக்கமாகவும் வேண்டாம் ; ரொம்பச் சுருக்கமாகவும் வேண்டாம். அதற்குத் தேவையானதை எல்லாம் செய்யும்’

ன்று அவர் பிறவிப்பெருமாள் பிள்ளையிடம் தெரிவித்தார்.

இந்த வீட்டிலே கல்யாணம்-கல்யாணம்’ என்ற செய்தி ஊர் பூராவும் முழங்கியது. எனினும், யாருக்கும் யாருக்கும் கல்யாணம் என்பது ரொம்பப் பேருக்குப் புரியாமலே இருந்தது.

கல்யாணத்துக்கு முந்திய நாள் சுந்தரம் வந்து சேர்ந் தான்.

அவைேடு கொடிய சூறைக்காற்று போல, அடங்க ஒடங்க இடித்துக்கொண்டு ’, ரீமதி மயிலேறும் பெருமாள் ஆன மீனட்சியும் மதுரையிலிருந்து வந்து சேந்தாள். வீட்டுக்குள் புகுந்ததுமே அலறிள்ை :

இதெல்லாம் நல்லாயிருக்கா? நல்லாயிருக்குதான்னு கேட்கேன் ??

எது? நீ போட்டிருக்கிற நகைகள் ; கட்டிஇருக்கிற பட்டு எல்லமா? நல்லாத்தான் இருக்கு 1 என்று பெரியபிள்ளை அமைதியாகச் சொன்னர்.

அவளுக்கு என்ன பேசுவது என்றே ஓடவில்லை. இதை பார்த்திட்டு வக்கணை கொழியுங்க ? என்று ஒரு கவரை தூக்கி அவர் முன்னல் வீசிள்ை.

பூ 108. கி.15.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/233&oldid=589492" இலிருந்து மீள்விக்கப்பட்டது