பக்கம்:நினைவுச்சரம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நினைவுச்

உள்ளது இல்லாதது, நல்லது ப்ெசல்லாதது பலவற்றையும் சூடாகவும் சுவையாகவும் கதைத்து-நாளோட்டுவதையே வாழ்க்கையாகக் கொண்டுவிட்டவர்களில் அவனும் ஒருவ குகக் கலந்து பழகியவன்தானே !

ஆகவே, அவன் தான் உண்டு, தன் வீடு உண்டு, அது சம்பந்தமான வேலைகள் உண்டு என்று ஒதுங்கிப் பிழைக்க ஆசைப்பட்டான். அவனுடைய கூச்ச சுபாவமும், நாலு பேரோடு சரிநிகர் சமானமாக வாயடி அடித்துப் போட்டி போட்டு முண்டி முரண்டி முன்னேற ஆசைப்படாத போக் கும், நத்தைக்கு கூடு அமைந்தமாதிரி, அவனுக்கு ஏற்ற கவசமாகிவிட்டன. ஒத்த வயசுப் பிள்ளையாண்டான்கள்உல்லாச மைனர் 'கள்-ஒண்டிக்கட்டைகள் பலரையும் போல் அவன் பொம்பிளே ஏக்கம் கொண்டு திரியவும் இல்லே.

அவன் சில சமயங்களில் பொழுது போக்குவதற்காகக் கூடிய நண்பர்கள் குழாத்தில், திருநெல்வேலி மாடத்தெரு , கனகராய முடுக்குத் தெரு, சொக்கலிங்க முடுக்குத் தெரு போன்ற, காசுக்குப் பெண் இன்பம் கிடைக்கக்கூடிய வட்டா ரங்கள் பற்றிய சுவாரஸ்யப் பேச்சுகள் அடிபடும். அங்குள்ள சரக்குகள் பற்றியும், அது’கள் தந்த ரசானுபவம் குறித்தும் மனநாக்கு சப்புக் கொட்டும்படியான வர்ணிப்புகளேச் சுவை யாக உலுப்பும் நபர்களும் இருந்தார்கள். அங்கே விவரம் இதரியாமல் போய் மாட்டிக்கொண்டவர்கள், சிலர் பெற்ற சிக்குகள் பற்றியும் கதைகதையாய் சொல்வார்கள். மஞ்சு தோய் மாடவீதி’ என்று கவி அழகாகச் சொன்னனே, அது இந்த மாடவீதிக்கும் பொருந்தும். மேகங்கள் தொட்டுத் தவழும்படியான உயர் கட்டிடங்களைக் கொண்ட மாடவீதி என்பது கவிவாக்கு இங்கோ? மேகநோய் படிந்த விலைமக ளிரைக் கொண்ட மாடவீதி என்ருகும். ஆகா, இந்த சிலேடை நயம் எவ்வாறு அமைந்துள்ளது என்று பாருங்கள் !-இப்படி ஒரு ரசிகர் தமது தமிழறிவையும் அனுபவ ஞானத்தையும் வெளிப்படுத்திக் கலகலப்பு ஏற்படுத்தினர் ஒரு சமயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/54&oldid=589298" இலிருந்து மீள்விக்கப்பட்டது